“Appy Valentine’s Day!”

சில தினங்கள் முன்பு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு பேரழகியைக் கண்டேன். உங்கள் எழுத்து என்றால் உயிர் என்றார். கிட்டத்தட்ட உங்கள் தற்கொலைப் படை மாதிரி என்று மேலும் சொன்னார். நடப்பது கனவா நனவா. நம்ப முடியாமல் வந்து விட்டேன். பிறகு அவ்வப்போது முகநூலில் என் பதிவுகளில் அவரது லைக்குகளைப் பார்த்து மகிழ்வேன். அந்த லைக்குக்கு ஒரு லைக் போட முடியுமா என்று ஸ்ரீராமைப் பார்க்கும் போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நேற்று முகநூலில் … Read more

சொந்த வாழ்க்கையும் எழுத்தும்…

என்னைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் விமர்சனம், என் எழுத்து சுயசரிதைத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாகும்.  நான் படித்தவரை சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா. போன்ற பலரும் அப்படித்தான் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.  அதிலும் தி.ஜானகிராமன் முழுக்க முழுக்க அவர் வாழ்ந்த, அவர் பார்த்த, அவர் அனுபவித்த வாழ்க்கையையே எழுதியிருக்கிறார்.  அதற்கு அவரோடு வாழ்ந்தவர்கள், அவருடைய பள்ளி, கல்லூரி கால சிநேகிதர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளும் பேட்டிகளுமே சாட்சி. அம்மா வந்தாள் நாவலின் கதாநாயகன் வேதபாடசாலையில் வேதம் … Read more