Review of Marginal Man
ArtReview Asia, Spring 2018 issue. https://artreview.com/reviews/ara_spring_2018_book_review_charu_nivedita/
ArtReview Asia, Spring 2018 issue. https://artreview.com/reviews/ara_spring_2018_book_review_charu_nivedita/
நாளை தில்லி செல்கிறேன். அங்கிருந்து நாளை மறுநாள் காலை ஆறு மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயிலில் நைனிட்டால் செல்கிறேன். அடுத்த மூன்று தினங்களும் ஆஷிஷ் நந்தியுடன் கலந்துரையாடல். அமார்த்யா சென் பொருளாதாரத்துக்கு என்றால் ஆஷிஷ் நந்தி சமூகவியல் மற்றும் உளவியல் துறையில். நோபல் கிடைத்திருக்க வேண்டும். இனிமேலும் கிடைக்கலாம். வங்காளம் தான் இப்படி அறிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது. தாகூர், ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மஹாஷ்வேதா தேவி, எம்.என் ராய், … Read more
ஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன். இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது. தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க. நன்றி… என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது. இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது. இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஆறு நூல்களே நாவல்கள். … Read more
இன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன். ”எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பைப் பகிர்ந்தது தப்புதான். அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன? ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.” இதை எழுதியிருப்பது ஒரு பெண். எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா? அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது. பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை. … Read more
ஷ்ருதி டிவி கபிலனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நவீன விருட்சம் சார்பில் நடந்த கூட்டத்தில் நேற்று இரவு 8.30 மணிக்குப் பேசிய பேச்சை இன்று காலையில் பதிவேற்றம் செய்து விட்டார். கு.ப.ரா. பற்றிப் பேச வாய்ப்பு அளித்த என் நீண்ட கால நண்பர் அழகிய சிங்கருக்கும் என் நன்றி.
Towards a Third Cinema என்ற தலைப்பில் சில லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி நான் எழுதிய நூல் நாளை வெளிவர உள்ளது. வெளியீட்டு விழா எல்லாம் இல்லை. நாளை நடக்கும் நவீன விருட்சம் நடத்தும் இலக்கிய விழாவில் அந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும். அவ்வளவுதான். இந்த நூலில் விசேஷம் என்னவென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பற்றிய மதிப்புரைகள் ஆங்கிலத்திலேயே இல்லை. ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் உள்ளன. இதுவரை சர்வதேசத் தளத்தில் பேசப்படாத மிக … Read more