மூங்கில் தோட்டம்

ஜெ வட துருவம். நான் தென் துருவம். உங்களுக்குத் தெரியும். ஜெ இளையராஜாவுக்கு வேண்டியவர். நான்? நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு தனிமை விரும்பி. அப்படிப்பட்ட நான் ரஹ்மானை சந்திக்க நேர்ந்தது ஓர் அதிசயம். நம்ப முடியாத அதிசயமாக அது நேர்நதது. ரஹ்மான் மிகவும் private person என்பதால் அந்தச் சந்திப்பு பற்றி மூன்று மாதம் வாயே திறக்கவில்லை நான். பிறகும் கூட ஒருசில வார்த்தைகளே எழுதினேன். அடுத்தவரின் அந்தரங்கம் நம்முடையது அல்ல. இமையமலை … Read more

தென்னமெரிக்கப் பெண்கள் (12)

ஒரு அரை மணி நேரம் பேசினால் போதும், நம் உயிருக்குயிரான தோழி கூட காட்டாத பாசத்தைப் பொழிந்து தள்ளி விடுகிறார்கள் ப்ரஸீலியப் பெண்களும் சீலே பெண்களும். இன்று ஒரு கஃபேவில் நானும் நண்பர் ரிக்கார்தோவும் வைன் அருந்திக்கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு ஜோடி. அறிமுகம் ஆனது. அவளுக்கு ஆங்கிலம் தெரிந்தது. கணவனுக்கு போர்த்துக்கீஸ் ஸ்பானிஷ் மட்டும் தான். ப்ரஸீல். அவள் என்னிடம் நீங்கள் இந்த பார் ஓனரா என்று. ஸ்பானிஷில். எல்லோருமே என்னிடம் ஸ்பானிஷில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். … Read more

S பெண்கள் (11)

கும்மோணம் ஃபில்டர் காஃபி கிடைக்குமா என்றேன் கைடிடம். ஓ தாராளமாக என்று சொல்லி அழைத்துப் போனார். நல்ல காஃபி குடித்தது மைலாப்பூரில்தான். ஆர்வமாகப் போனேன். காஃபி என்று சொல்லி வழக்கம் போல் ஐஸ்க்ரீம். ஐஸ்க்ரீமுக்கு அடியில் கழனித்தண்ணி மாதிரி காஃபி. உவ்வே. ஆனால் பரிசாரகப் பெண்கள் அனைவரும் S எழுத்தைத் திருப்பிப் போட்டது போல் இருந்தார்கள். அதிலும் டிரஸ் வாங்கவும் காசு இல்லாத வறுமை போல. ஆனால் நாங்கள் இவர்களை கிதார் பெண்கள் என்போம் என்றார் கைட் … Read more

எழுத்தாளன், சமூகம், சந்த்தியாகோ, தோஹா… (9)

நேற்று நான் எழுதியிருந்ததற்கு ஒரு சில வாசக நண்பர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள்.  9000 வந்தது.  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  ஆனால் செலவு இங்கே பிய்த்துக் கொண்டுபோகிறது. நான்கு மணி நேரத்துக்கு நானூறு யுஎஸ் டாலர். மூன்று நாட்களுக்குப் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட 90000 ரூ. மற்ற நேரங்களில் தனியாகச் சுற்ற வேண்டும்.  இதில் பெரியவேடிக்கை என்னவென்றால் இன்னொரு ஆள் என்னோடு ஒரு பைசா செலவில்லாமல் சுற்றலாம். சாப்பாடு அவர்கள் கொடுப்பதில் நான்கில் ஒரு மடங்குதான் சாப்பிட முடிகிறது. … Read more

சந்த்தியாகோவில் அடியேன் (8)

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வப்போது வாசகர்களிடம் பணம் கேட்பதுதான் சங்கடமாக இருக்கிறது” என்றார் நண்பர் ஒருவர். இன்னொரு மிக நெருங்கிய நண்பர் இதே காரணத்தினால் என் இணைய தளத்தையே படிப்பதில்லை. என் மீது கொண்ட அதீத அன்பினால் நான் அப்படிப் பணம் கேட்பது அவருக்கு சங்கடமாக இருக்கிறது. நண்பர்களே விவேகானந்தரும் இன்னும் பல ஆன்மீக குருநாதர்களும் தங்கள் நிறுவனங்களுக்காக அன்பர்களிடம் பணம் கேட்கவில்லையா? தாகூர் ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் தன் கல்வி நிறுவனத்துக்காக லட்சம் … Read more