ஜாகை மாற்றுகிறேன்…

இப்போது இருக்கும் வீட்டிலேயே இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் இருக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். வீட்டு உரிமையாளரும் அப்படித்தான் எண்ணியிருந்தார். வீட்டு உரிமையாளர் மிகவும் நல்லவர். ஆனால் பக்கத்து வீட்டு ரவுடியால் வீடு மாற்றும்படியான சூழல். நண்பர்கள் உதவி செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹமீதும் செல்வியும்தான் தெருத் தெருவாக அலைந்து எனக்காக மைலாப்பூரில் வீடு பார்த்துக் கொடுத்தார். இப்போது அவர் பெரிய இடத்தில் இருக்கிறார். அவருடைய நட்பு வட்டத்திலும் நான் இல்லை. மைலாப்பூர், மந்தவெளி, ஆர் ஏ … Read more

அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் உரையாடல்… (தொடர்ச்சி)

கேள்வி:  இங்கே தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைப்பதில்லை.  தி.ஜ.ரங்கநாதன் பற்றிய கட்டுரையை பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் சேர்த்து விட்டு, தி.ஜ.ர.வின் புகைப்படத்தையும் இணைத்திருந்தேன்.  பதிப்பாளரிடமும் போன் செய்து எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.  மாதிரி பிரதி என் பார்வைக்கு வந்தது.  பார்த்தால் தி.ஜ.ர.வின் கட்டுரையில் தி.ஜானகிராமனின் புகைப்படம்.  கோபத்தில் உடல் நடுங்க பதிப்பாளரை அழைத்தேன்.  அவரோ அழாக்குறையாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்.  விஷயம் என்னவென்றால், தி.ஜா. பற்றிய … Read more

சமூக விரோதிகள்…

நான் பிராமினாப் பிறந்ததைப் பெருமையா நினைக்கிறேன்; பிராமினுக்கு புத்தி அதிகம்; க்ஷத்ரியாளுக்கு உடல் வலிமை அதிகம் என்று சொன்ன ஒய்ஜி மகேந்திரன் மகளை பிராமண நண்பர்கள் காறித்துப்பி இருக்க வேண்டும். செய்யவில்லை. வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அப்படிக் காறித் துப்பாவிட்டால் பிராமண துவேஷம் அதிகமாகிக் கொண்டேதான் போகும். ஒரு கட்டத்தில் பெரியார் சொன்ன மாதிரி, பாம்பையும் பாப்பானையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்ற நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. நான் எந்த சாதியையும் ஆதரிப்பவன் … Read more

நாகூர் நேஷனல் ஹை ஸ்கூல்…

செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாம்.  அன்றைய தினம் காலை பத்து மணிக்கு நாகூர் நேஷனல் ஹைஸ்கூலில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றுகிறேன்.  பழைய மாணவர் சந்திப்பு என்றுதான் பழைய மாணவர்கள் சொன்னார்கள்.  50 ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிறோம். ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்பதால் மாணவர்களிடையே பேசுங்கள் என்றார்கள்.  வெறும் சினிமாவை மட்டுமே அறிந்த மாணவர்களிடையே என்ன நான் பேச முடியும்?  என்றாலும் யாரிடமாவது அந்தத் தீப்பொறி பற்றும் இல்லையா?  ஒருவரிடமாவது?  … Read more

மீண்டும் தடம் பற்றி…

கிட்டத்தட்ட நூறு பேரை முகநூலில் என் நட்பு வட்டத்திலிருந்து நீக்கினேன். யாருக்குமே நாம் பேசுவதன் பொருளை அறிந்து கொள்ளவோ, சொல்லின் உள்ளே செல்லவோ பொறுமை இல்லை. அவர்கள் என் எழுத்தைப் படித்துப் பயனில்லை என்று எல்லோரையும் நீக்கி விட்டேன். தடம் பற்றி நான் எழுதியிருந்ததன் பொருளே பலருக்கும் புரியவில்லை. முதியோர் இல்லம் மாதிரி பத்திரிகை நடத்தினா எவன்யா வாங்குவான் என்பது என் கேள்வி. உடனே எதிர்க் கேள்வி என்ன தெரியுமா? நடத்துபவர்களெல்லாம் இளைஞர்கள்; நீர்தான் வயசானவன். அடப்பாவிகளா! … Read more