M&L

அலெஹாந்த்ரா பிஸார்னிக் (Alejandra Pizarnik) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவரைப் போன்ற ஒரு கவிஞர் உலகில் இல்லை. இவரை ஒப்பிட வேண்டுமானால் யாருடன் ஒப்பிடுவது என்றே தெரியவில்லை. வேறு துறைகளில் வேண்டுமானால் ஒப்பிடலாம். அந்தோனின் ஆர்த்தோ, மார்க்கி தெ சாத் என்று ஒரு சிலர். இவர் ஒரே ஒரு சிறுகதைதான் எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். அந்தச் சிறுகதையை ரத்த வேட்கை என்ற தலைப்பில் ஊரின் மிக அழகான பெண் என்ற என் மொழிபெயர்ப்புத் தொகுதியில் மொழிபெயர்த்திருக்கிறேன். இப்படி ஒரு … Read more

என்னென்ன நூல்கள் வேண்டும்?

அன்புள்ள சாரு,உங்கள் பதிவு பார்த்தேன். என்ன புத்தகங்கள் வேண்டும் சாரு? யாருக்கு அனுப்பினால் உங்களுக்கு உடனே கிடைக்கும்?அன்புடன், ***** பிரியமுள்ள ……………….க்கு, ஆஹா தெய்வமே, நீங்களா?  இருங்கள்.  உங்களுக்கு விரிவாக எழுத வேண்டும். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia என்ற பத்திரிகையில் Notes from Madras என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறேன்.  அது ஓவியத்திற்காகவே வரும் ஒரு குவார்ட்டர்லி பத்திரிகை.  அதன் ஆசிரியர் மார்க் எனக்கு எழுதிய முதல் … Read more

சில நூல்கள் தேவை

அமெரிக்காவில் வசிக்கும் சில நண்பர்கள் எனக்கு நூல்கள் தேவைப்படும் போதெல்லாம் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களின் மின்னஞ்சல் முகவரி இருந்த குறிப்பேடு தொலைந்து விட்டது. வாட்ஸப்பில் இருந்த ஓரிருவர் மட்டுமே கைவசம் உள்ள தொடர்பு. ஒருவரிடமே எல்லா சுமையையும் ஏற்றக் கூடாது என்பதால் புத்தகம் வாங்கி அனுப்பக் கூடிய நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புத்தகங்களை இந்திய முகவரிக்கு அனுப்பத் தேவையிருக்காது. அங்கேயே உள்ள நண்பர்களுக்கு அனுப்பி விட்டால் அவர்கள் இந்தியா … Read more

ஆனது ஆகட்டும்…

நமக்கு முகம் தெரியாமல் நம் நண்பர்களாக முகநூலில் புழங்குபவர்கள் பலர் நம்மிடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நான் முகநூலில் இருப்பதற்குக் காரணம், சமூகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே ஒரு தொடர்பு சாதனம் அதுதான். மற்றபடி நான் செய்தித்தாள் கூடப் படிப்பதில்லை. தொலைக்காட்சி என் வீட்டிலேயே இல்லை. நேற்று பூனைகளின் நிலை பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்: வீட்டில் மூட்டை மூட்டையாக பூனை உணவு இருக்கிறது. நாலைந்து பூனைகள் தரைத் தளத்தில் … Read more

ரஜினியும் சுவாமியும்

நான் மோடி ஆதரவாளன் அல்ல; மனித சுதந்திரம் பற்றிக் கவலைப்படும் யாருமே இன்றைய நிலையில் மோடி ஆதரவாளராக இருக்க முடியாது. அவர் மூலம் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸம் மக்கள் மனதில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதே என் நிலைப்பாடு. எனவே நான் மோடியை எதிர்க்கிறேன். மோடியை விட ஊழல் காங்கிரஸ் தேவலை. ஏனென்றால், ஃபாஸிஸத்தை விட ஊழல் பரவாயில்லை. அதற்காக, இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பதாலேயே மோடியின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருக்க மாட்டேன். காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை நீக்கியது … Read more