சொல் தீண்டிப் பழகு
சொல் தீண்டிப் பழகு, குமுதம், 8.4.20
சொல் தீண்டிப் பழகு, குமுதம், 8.4.20
அரூ என்ற பெயரில் வெளிவரும் இணைய சஞ்சிகையின் ஏழாவது இதழ் இத்துடன். இதில் கடவுளுடன் ஒரு சுற்றுலா என்ற என்னுடைய ஒரு கட்டுரையும் உண்டு. இது கட்டுரையாக எழுதியது அல்ல. அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைகளின் நடுவராக இருந்து நான் தேர்ந்தெடுத்த கதைகளுக்கு எழுதிய முன்னுரை. போட்டிக்கு வந்த கதைகள் 98. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 15. என்னுடைய முன்னுரை அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அரூ ஆசிரியர் குழு நண்பர்கள் … Read more
மோடி மஸ்தான் வேலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே? அது ஒரு எழுத்தாளனையும் பாதித்து விட்டது. இல்லாவிட்டால் பாருங்களேன், ப்ளாட்ஃபார்ம் படத்தில் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது ஒரு நாவல். அதுவும் எப்படிப்பட்ட நாவல், அதைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நாவல் உலகிலேயே இலை. செர்வாந்தேஸ் எழுதிய தோன் கெஹோத்தே (Don Quixote). அதைப் போய் மறந்து விட்டு, அவன் கையில் வைத்திருந்தது மெழுகுவர்த்தி என்று எழுதியிருக்கிறேன். மோடி வித்தையின் பலம் புரிகிறதா? இதைத்தான் மஸ்தான் சாதிக்க நினைக்கிறார். சாதித்தும் … Read more
பூச்சி – 14இல் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது மெழுகுவர்த்தி அல்ல. தோன் கெஹோத்தே (Don Quixote) நாவல். பாருங்கள், மோடியின் மெழுகுவர்த்தி என்னென்ன ஜாலமெல்லாம் காட்டுகிறது என்று. புத்தகம் – அதுவும் என்ன மாதிரி ஒரு புத்தகம் – மெழுகுவர்த்தியாக மாறி விட்டது என்றால், இது நிச்சயம் மஸ்தான் வேலை.
இல்லை, இன்னமுமே பதில் சொல்லி முடித்து விட்டதாகத் தோன்ற மாட்டேன் என்கிறது. ஏனென்றால், இலக்கியத்தினால் எந்தப் பயனும் இல்லை; ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு நான் நாற்பது ஆண்டுகளாக பதில் சொல்லிக்கொண்டு வந்தாலும் எனக்கு இன்னும் சரியான பதிலை சொல்லி விட்டதாகத் தோன்றவில்லை. ஒரே வார்த்தையில் சொல்கிறேன். நேற்று நான் எழுதிய மூன்று கட்டுரைகளின் மொத்த வார்த்தைகள் 4267. இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இன்னும் நாலாயிரம் வார்த்தைகளை எழுதியிருப்பேன். இத்தனை வார்த்தைகளை எந்தச் … Read more
சரி, இப்போதாவது இந்த எழுத்தாளர் மேட்டருக்கு வருவோம். அது ஒன்றுமில்லை. முகநூலில் பிரபலமாக இருக்கும் நம் ராஜ் சிவா இருக்கிறாரே, அவர் என் குடும்பத்தைச் சேர்ந்தவர். என் குடும்பத்தில் ஒருத்தர். அவரோடுதான் இப்போது பஞ்சாயத்து. அதை அவர் எழுதிய அன்றே போட்டிருக்க வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. ”இப்போ புரிகிறதா? எந்தவொரு இலக்கியவாதியோ, எந்தவொரு எழுத்தாளனோ, எந்தவொரு நடிகனோ, எந்தவொரு அரசியல்வாதியோ, எந்தவொரு மதத் தலைவனோ, எந்தவொரு ஆன்மீகச் சாமியாரோ, எந்தவொரு கோடீஸ்வரனோ… யாருமே பெரியவனில்லை. நீ அவன் … Read more