பூச்சி – 24

“எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களது பார்வையில் எனது சந்தேகம் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்னும் உங்களது கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த வருத்தமும் ஆற்றாமையும் எனக்கும் உண்டு. அதே சமயம் மாட்டு இறைச்சி உண்பவர்களையும், பூனை, நாய் உள்ளிட்டவற்றை உண்பவர்களையும் கொடூரமானவர்கள் போல சித்தரிப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் … Read more

பூச்சிக்கு இடையே ஓர் இடைச்செருகல்:

முகநூலில் பின்வருமாறு ஒரு உரையாடல்: கலை என்பதை அது தொடர்பான நிபுணர்கள் அதாவது கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொருவருடைய வாழ்வும் கலை இல்லையா?ஒரு வீடோ அல்லது ஒரு விளக்கோ கலைப் பொருளாகக் கருதப்படும்போது நமது வாழ்க்கை ஏன் கலை என அங்கீகரிக்கப்படவில்லை?” – மிஷேல் ஃபூக்கோ தமிழில்: ரவிக்குமார். தன்னிலையும் அதிகாரமும்: ( அராத்து: கலைக்கு கற்பனை தேவை. படைப்பூக்கம் இருக்கும். நம் அன்றாட வாழ்வில் என்ன பெரிய கற்பனையும் படைப்பூக்கம் இருக்கிறது. … Read more

பூச்சி – 23

அன்புள்ள சாரு, கொரானவுக்கு முன்பு வரை உங்களது எழுத்துக்களை மிகுந்த உற்சாகத்துடன் திறந்த மனநிலையுடன் படித்து வந்தேன்,ஆனால் இப்பொழுதெல்லாம் உங்களது எழுத்துக்களை உற்சாகமின்றி குற்ற உணர்ச்சியுடன் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். மோடியையும் இந்துத்துவாவையும் எதிர்த்துக் கொண்டே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உங்களது எழுத்துக்கள் அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தப்லீக் ஜமாத் பற்றிய உங்களது அனைத்து கருத்துகளும் ஊடகங்களின் வாயிலாக நீங்கள் பெற்ற தகவலாகத்தான் நான் பார்க்கிறேன்.  நீங்கள் கண்ணை  மூடிக்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்றெல்லாம் நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை எழுதுங்கள்.  … Read more

பூச்சி – 22

நேற்றைய தொடர்ச்சி புஷ்கரமூலம் வால்மிளகு முர்வா என்று சம்ஸ்கிருதத்தில் உள்ளது.  பெருங்குரும்பை என்று மலையாளத்திலும் தமிழில் பஞ்சுக்கொடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  சரியாகத் தெரியவில்லை. வேப்பிலை முருங்கை விதை அதிமதுரம் வேப்பிலை விதை தண்ணீர் முட்டான் கிழங்கு மரமஞ்சள் சிவப்புச் சந்தனம் பத்மாகா சீமை தேவதாரு வெட்டிவேர் லவங்கம் மூவிலை ஓமம் அதிவிஷம் வில்வப் பட்டை கருப்பு மிளகு லவங்கப் பத்திரி நெல்லிக்காய் அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகின்ற சீந்தில் கடுகி சித்திரமூலம் காட்டுப்பேய்ப் புடலை சித்திரப்பாலாடை இப்படி நான் … Read more

பூச்சி – 21

தில்லியில் ஐம்பது பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எங்கள் இஷ்டப்படி இருப்போம் என்ற மனோபாவத்துடன் நடந்து கொண்ட தப்லிக் ஜமாத்தின் செயல்பாடுகளின் விளைவு இன்று தில்லியில் 1069 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் என்றால் அதில் 712 பேர் தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள்.  கடந்த 24 மணி நேரத்தில் பாஸிடிவ் முடிவு வந்தவர்களில் 128 பேர் – அதாவது 77 சதவிகிதம் பேர் தப்லிக் மாநாட்டில் … Read more