பூச்சி – 35

சமீபத்திய என் கட்டுரைகளைப் படித்து சிலருக்கு சாரு இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டாரோ என்று தோன்றலாம்.  ஒவ்வொரு பிரச்சினையையும் எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகுவதே என் வழக்கம்.  மற்றபடி நான் எக்காலத்திலும் எந்த மதத்துக்கும் சார்பானவன் அல்ல.  இஸ்லாம் என்றால் இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சூஃபிகளின் மாணவன் நான்.  கிறித்தவம் என்றால், அங்கே நான் OPUS DEI போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரானவன்; John of the Cross-இன் சீடன்.  இந்து மதம் என்றால் அங்கே நான் … Read more

பூச்சி – 34

கணேஷ் அன்புவின் கடிதம். கடிதத்தின் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாராட்டு வார்த்தை உள்ளது.  ”உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன்.”   ஏன் ஐயா, யாரை யார் பாராட்டுவது?  நட்பின் காரணமாகத் தோள் மீது கை போட்டால் இருவரும் சமம் என நினைத்துக் கொள்வதா?  அமார்த்யா சென்னிடம் போய் “உங்கள் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது” என்று சொல்ல முடியுமா?  சொல்லலாம்.  சொல்பவர் அமார்த்யா சென்னை விடப் பெரிய … Read more

பூச்சி – 33

டியர் சாரு,  உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன். எனது ஐயங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், உங்களது பார்வையில் நானும் கொஞ்சம் தெளிவுறுவேன் என்ற அடிப்படையிலேயே அவற்றை எழுப்பினேன். என் போன்ற பல ஆயிரம் பேருக்கும், இனி வரும் காலங்களில் பூச்சி தொடரை வாசிப்போருக்கும் உங்களது பதில்கள் பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமிதமே. நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் எனக்குத் தெளிவாக புரிகிறது சாரு. … Read more

நூறு சிம்மாசனங்கள் பற்றி சாரு

ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் பற்றி கார்ல் மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சாரு விரிவாகப் பேசியிருந்தார். இணைப்பு கீழே:

பூச்சி – 32

சென்ற அத்தியாயத்தில் ஒரு முக்கிய விபரம் விடுபட்டு விட்டது.  மீன் கடையில் எனக்கு முன்னே நின்றவர்களில் மூன்று பேர் Dunzo ஆட்கள்.  ஆக, மீன் கடையின் டோர் டெலிவரி போக டன்ஸோ மூலமாகவும் மீனை வீட்டுக்குத் தருவித்துக் கொள்ளலாம்.  இரண்டு வாரத்துக்கு முன் எனக்கு வேண்டிய மருந்துகள் தேவைப்பட்ட போது, என் வீட்டை அடுத்து உள்ள அப்பல்லோ ஃபார்மஸியில் சில மருந்துகள் இல்லை எனக் கைவிரித்து விட்ட போது, மீனம்பாக்கத்திலிருந்து ஒரு வாசகி எனக்கான மருந்துகளை டன்ஸோ … Read more

பூச்சி – 31

    சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் என் பிரதான மாணவியை அழைத்து, “இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா?  ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் நீ இப்படிப் பொறுப்பில்லாமல் (ம்ஹும், நினைவில் வந்த ‘பொறுப்பில்லாமல்’ என்ற வார்த்தையை அப்படியே ரத்து செய்து விட்டு வேறொரு வார்த்தையைப் போட்டு ரொப்பினேன்) இப்படி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ளலாமா?  இது சம்பந்தமாக திரு. கிருஷ்ணனும் இதே மாதிரிதான் நினைக்கிறார்.  நேற்று இது பற்றி இருவரும் ஒரு மணி நேரம் புலம்பிக் கொண்டிருந்தோம்” … Read more