பூச்சி 45

இன்றைக்கு சீக்கிரமே தூங்கப் போய் விடலாம் என்று நினைத்தேன்.  அந்த நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டார் பக்கத்துத் தெரு அய்யங்கார்.  இந்த உலகத்திலேயே துரதிர்ஷ்டமான விஷயம் எது என்று நினைக்கிறீர்கள்?  இர்ஃபான் கான், ரிஷி கபூர் மரணங்களைப் பார்த்த போது இந்தக் கொரோனா காலத்தில் இறப்பதுதான் என்று நினைத்தேன்.  கெட்டதிலும் கொஞ்சம் நல்லது என்னவென்றால், நல்ல காலம் அவர்கள் கொரோனாவினால் போகவில்லை.  அப்படியிருந்திருந்தால் முகத்தைக் கூடக் காண்பித்திருக்க மாட்டார்கள்.  என்ன இருந்தாலும் இளவயது மரணம் கொடுமையானதுதான்.  அதை … Read more

குறுநாவல்கள் குறித்த ஓர் உரையாடல்

வரும் ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் மாலை 6 மணிக்கு குறுநாவல்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். சில ஆலோசனைகள்: நான் ஒரு குறுநாவல் படித்தேன் சாரு என்று ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அந்தக் குறுநாவலை எனக்கு விளக்கக் கூடாது. அது ஒன்றுதான் நிபந்தனை. மற்றபடி அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

பூச்சி 44

காலையில் எட்டரை மணிக்கு மாடியிலிருந்து கீழே வந்தேன்.  ராகவன் மூன்று நாட்களாக என்னோடு பேசுவதற்கு முயற்சி செய்கிறார்.  என்னால் போனை எடுக்கவே முடியவில்லை.  ஏன் என்று இந்தப் பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும்.  காலையில் வாக்கிங் சமயத்தில் என்னை ஃபோனில் பிடிக்க முடியாது.  மாலையில் செய்வார்.  அப்போதுதான் நான் அவசர அவசரமாக டைப் பண்ணிக் கொண்டிருப்பேன்.  எடுக்க இயலாது.  ஏனென்றால், வேண்டாம், இதைப் படித்து முடிப்பதற்குள் உங்களுக்குப் புரிந்து விடும்.  ராமசேஷனும் மூன்று நாட்களாக என்னோடு பேச … Read more

பூச்சி 43

41 பற்றி அராத்து எழுதியது: சாரு தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளைப் பற்றியும் அவர்களின் கொண்டாட்டமான கலாச்சாரத்தைப் பற்றியும், அவர்களின் இலக்கியம், இசை பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இங்கே இருக்கும் இந்திய இஸ்லாமியர்களுக்கே இதெல்லாம் விசித்திரமாக இருக்கும். இங்கே இந்தியாவில் கட்டுப்பெட்டியான இந்துக்களுக்கு நடுவே வாழ்வதால் இந்திய முஸ்லீம்கள் இறுக்கமாக வாழ்வதைத் தங்கள் கலாச்சாரமாக ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. *** என் எழுத்து வாழ்க்கையில் பூச்சி தொடரைப் போல் இதுவரை எதிர்வினைகள் வந்ததில்லை.  நிறைய வசை கடிதங்கள்.  … Read more

பூச்சி 42

அய்யங்கார்களின் மரபணு – பொதுவாகவே பிராமணர்களின் மரபணு பற்றி எழுதினேன்.  அதில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது.  ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன்.  அய்யங்கார் பையனும் அ-பிராமணப் பையன்களும் ஒன்றாகச் சேர்ந்து குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டு கிடப்பான்கள்.  கல்லூரி மாணவர்கள்.  தேர்வுகள் வரும்.  அ-பிராமணப் பையன்கள் தேர்வில் தோல்வி அடைந்து விடுவான்கள். அய்யங்கார் பையன் மட்டும் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு வாங்கித் தேர்ச்சி அடைவான்.  இத்தனை எடுத்தும் மெடிக்கல் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீடே கூடாது என்றும் புலம்புவான்.   அதன் பிறகு … Read more

பூச்சி – 41

கம்யு ஒரு அல்ஜீரியனாகவே இருந்தாலும், தன் வாழ்நாள் முழுதும் மக்ரிப் அரபிகளையே ஆதரித்தாலும் அல்ஜீரியர்கள் கம்யூவைத் தங்கள் நினைவிலிருந்து துடைத்து அழித்து விட்டதற்குக் காரணத்தை உங்களில் யாராவது என்னுடைய சார்த்தர் பற்றிய கட்டுரைகளை ஞாபகத்தில் வைத்திருந்தால் இப்போது சொல்லி விடலாம்.  சார்த்தருக்கு அல்ஜீரியர்களை நேரடியாகத் தெரியாது.  அவர் ஒரு தத்துவவாதி.  அதிலும் அவரது தத்துவத்தின் மூலக்கூறுகளை அவர் ஜெர்மன் தத்துவவாதிகளிடமிருந்து பெற்றிருந்தார்.  ஜெர்மன் தத்துவவாதிகளோ – நீட்ஷேவையும் மார்க்ஸையும் தவிர்த்து – நேரடி வாழ்விலிருந்து பெரிதும் அந்நியமானவர்கள்.  … Read more