பூச்சி – 49

இந்த அய்யங்கார்களைப் பற்றின என் பதிவுகளுக்குக் காரணமே சீனியின் தவப்புதல்வன் ஆழிமழைக் கண்ணன்தான்.  ஆழியின் பேச்சுக்களை வைத்து சீனி புத்தகமே போட்டு விட்டார்.  சகலகலா வல்லவன்.  நன்றாகப் பாடுகிறான்.  எனக்கு இப்படி “என் பையன்/பெண் நல்லா பாடுவான்/ள்” என்று சொல்லும் ஆட்களைக் கண்டாலே பிடிக்காது.  ஏனென்றால், உடனே இளையராஜா பாட்டை எடுத்து விடுவார்கள் பிள்ளைகள்.  அது ஏதாவது முதலிரவு சல்லாபப் பாடலாக இருக்கும்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜனனி மனனி என்று.  ஆனால் ஆழி பாடினான் பாருங்கள் … Read more

பூச்சி – 48

சென்ற ஆண்டு நான் வெப்சீரீஸிலேயே மூழ்கிக் கிடந்த போது மெஸையா என்ற ஒரு தொடரைப் பார்த்தேன்.  அது பற்றி யாரும் குறிப்பிடாதது எனக்கு ஒரு ஆச்சரியம்.  அந்தத் தொடரைப் பார்த்தவர்களால் அதை மறக்கவே இயலாது.  அதன் கதை அப்படி.  இயேசு கிறிஸ்து இப்போது மீண்டும் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதே கதை.  என்ன ஒரு கற்பனை! அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.   அரபியில் மெஸ்ஸி மெஸ்ஸி என்றே அழைக்கிறார்கள்.  மெஸ்ஸி என்பது மெஸையா போல.  யேசுவின் அற்புதங்களையெல்லாம் … Read more

பூச்சி 47

புத்திசாலி அய்யங்கார்களைப் பற்றிச் சொல்லும் போதே வேறொருவர் பற்றியும் குறிப்பிட்டேன்.  வேண்டாம்.  கனிந்த பிறகு யாரையும் மக்கு என்று சொல்ல மனசு வர மாட்டேன் என்கிறது.  இன்று காயத்ரியும் நீங்கள் கனிந்து விட்டீர்கள் என்றாள்.  அப்படியானால் அது உண்மைதான் போல.  இனிமேலும் ஸர்ப்பகந்தா மூலிகையின் மாயம்தான் அது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.  ஆனால் ஸர்ப்பகந்தாவினாலும் இருக்கலாம்.  ஸ்கீஸோஃப்ரீனியாவுக்கே மருந்தாயிற்றே?  இருந்தாலும் இன்னொரு காரணத்தையும் மனம் உசாவுகிறது.  ராம்ஜிதான் அது.  Zelig என்ற வூடி ஆலனின் படம் … Read more

மாயா இலக்கிய வட்டம் : உரையாடல்

நேற்றைய Zoom சந்திப்பின் காரணமாக பூச்சியின் பக்கம் வர முடியவில்லை.  நேற்றுதான் பல தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்தது பேச்சும் உரையாடலும்.  அந்த இரண்டு மணி நேரமும் போனை கையிலேயேதான் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அது அவசியமில்லை என்று காயத்ரி சொன்னாள்.  ஆமாம்.  போனை ஒரு பக்கம் வைத்துக் கூட இருக்கலாம்.   அது பாட்டுக்கு சாய்ந்தபடியோ நின்றபடியோ நின்று கொண்டிருக்கும்.  அது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று என்று தெரியவில்லை.  இன்னொரு … Read more

பூச்சி 46

என் எழுத்தின் வாசனை கூட அறியாதவர்கள் “நம்ம மதத்தைத் திட்டி எவனோ சாரூன்னு ஒருத்தன் எழுதியிருக்கான், பாத்தியா?” என்று நண்பர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டு, பூச்சியைப் படித்து விட்டு என்னைத் திட்டி கடிதம் எழுதும் அன்பர்களுக்கு இனிமேல் பதில் எழுதுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  ஏனென்றால், என் எழுத்தோடு பத்து வருடப் பரிச்சயம் உள்ளவர்களே தப்பும் தவறுமாகப் புரிந்து கொள்ளும் நிலையில் இப்படிப் புதிதாக வரும் அசடுகளைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை.  இப்படி எழுதுபவர்கள் இந்து மற்றும் … Read more

குறுநாவல்கள் குறித்த உரையாடல்

நாளை ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் 6 மணிக்கு நடக்க இருக்கும் Zoom மூலமான உரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர் அதற்கான விபரங்களைக் குறித்துக் கொள்ளலாம். Meeting ID 835 583 9946 Password 94241483 முடிந்தால் கீழ்க்கண்ட சில குறுநாவல்களை வாசித்து விட்டும் வரலாம்: Two Old Men : டால்ஸ்டாய் A Nasty Story : தஸ்தயேவ்ஸ்கி எட்டாவது நாள்: ஆ. மாதவன் இருவர்: அசோகமித்திரன் மற்றும் அசோகமித்திரனின் … Read more