zoom meeting 31 may

மே 31, ஞாயிறு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு Zoom மூலமான இலக்கியச் சந்திப்பு பற்றி குறித்து வைத்துக் கொண்டீர்களா?  நண்பர் மனோகர் சொன்னார், நூறு பேர்தான் கலந்து கொள்ள முடியும் என்ற கணக்கெல்லாம் இல்லை, எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று.  மாயா இலக்கிய வட்டத்தில் நூறு என வரையறை செய்திருக்கலாம்.  நாம் எத்தனை பேரை உள்ளடக்கலாம் என்று சதீஷ்வரைக் கேட்டு எழுதுகிறேன்.  சில நண்பர்கள் சதீஷ்வரைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  நல்லது.  … Read more

பூச்சி 64

குடி பற்றி நான் இவ்வளவு எழுதியும் அதைப் படிக்காமல், அல்லது படித்து விட்டும் அதைக் கண்டு கொள்ளாமல் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறான், குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடிக்கிறான் என்றே எழுதிக் கொண்டிருக்கும் சமூக சிந்தனையாளர்களை என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.  ஏனய்யா, தமிழ்நாட்டுக் குடிகாரர்கள் மட்டும்தான் நரகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்களா?  இதே துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், மற்றும் இன்னோரன்ன உதிரித் தொழிலாளி வர்க்கத்தினர், பாட்டாளி மக்கள் எல்லோரும் கர்னாடகாவில் குடித்து விட்டு எப்படி … Read more

பூச்சி 63

பூச்சியை முடித்து விட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்றால், இதை இன்னும் ஆரம்பித்தது போலவே இல்லை என்கிறாற்போல் இருக்கிறது.  இந்த உணர்வு வரும் போதெல்லாம் எனக்கு இரண்டு பேரின் ஞாபகம் தொற்றும்.  அசோகமித்திரன், ஜான் பால் சார்த்தர்.  86 வயதில் அவர் காலமாகும் வரை – ஏன், சாகும் தருணத்தில் கூட அசோகமித்திரன் நம்மிடம் சொல்வதற்குப் புதிது புதிதாகக் கதைகள் வைத்திருந்தார்.  ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கதைகள் அவரது இளம் பிராயத்துக் கதைகளாக இருந்தன.  ஜெமினி ஸ்டியோவில் … Read more

அமேஸிங் அனுபவங்கள் – செல்வேந்திரன்

எப்போதுமே எனக்குப் பிடித்தவைகளுக்கு நான் லைக் போடுவதில்லை. அவற்றை என் பக்கத்தில் ஷேர் செய்து விடுவேன். ஆனால் செல்வேந்திரனின் இந்தக் கட்டுரை மிக முக்கியமானது. புத்தக விற்பனை, புத்தகம் வாசகரைச் சென்றடைதல் என்ற செயல்பாட்டில் சில புரட்சிகர மாற்றங்கள் நடந்திருப்பதை ஆதாரபூர்வமாகச் சொல்கிறார் செல்வேந்திரன். கவனமாகப் படியுங்கள். இனி செல்வேந்திரன்: அமேஸிங் அனுபவங்கள் என் நெடுநாள் விருப்பமெல்லாம் நாவல் எழுதுவது. அதை எனக்குப் பிடித்தமாதிரி எழுதுவது. அதற்குரிய தன்னம்பிக்கை இன்றும் வந்துவிடவில்லை. தமிழில் டைப்படிக்கத் தெரியும் ஒரே … Read more

பூச்சி 62

காயத்ரி ஆசைப்பட்டதும் அவள் வீட்டுக்குக் கடவுள் அனுப்பி வைத்த பூனை பற்றிய ஒரு முக்கியமான விஷயம், அது ஒரு காலிகோ பூனை.  காலிகோ பூனைகள் அதிர்ஷ்டமானவை என்பது ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் நம்பிக்கை. காலிகோ பூனைகள் மஞ்சள், கறுப்பு, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கும்.  அநேகமாக காலிகோ பூனைகள் பெண் பூனைகளாகவே இருக்கும்.  எங்கள் வீட்டு ஸிஸ்ஸி அதன் முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளைப் போட்டு – அப்போது அது எங்கள் … Read more

Zoom meeting

வரும் 31-ஆம் தேதி (31.5.2020) இந்திய நேரம் காலை ஆறு மணி முதல் எட்டரை வரை வாசகர்களை Zoom meeting-இல் சந்திக்க இருக்கிறேன்.  இதுவரை மாயா இலக்கிய வட்டம் (சிங்கப்பூர்) சார்பாக நடந்த சந்திப்புகள் இந்திய நேரம் மாலை மூன்று மணிக்கு நடந்ததால் அதில் அமெரிக்க வாசகர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.  அங்கே அவர்களுக்கு அதிகாலையாக இருக்கும்.  அதை உத்தேசித்து அவர்களுக்காகவே இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  எட்டரைக்கு மேல் இங்கே cat factory ஆரம்பமாகி விடும்.  பாத்திரம் … Read more