excerpt from “the story of my assassins”

பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற ஆயிரம் பக்க நாவலின் பத்து பக்கங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தேன்.  இவ்வளவுக்கும் அது ஒரு தமிழ் நாவல்.  ஆனால் அதே அளவில் உள்ள the story of my assassins நாவலை வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது அந்த நாவல்.  இவ்வளவுக்கும் ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி.  அதிலும் assassins நாவல் மிகக் கடுமையான … Read more

another glimpse of happiness…

இந்த Bogdan Ota பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  இப்போது இந்த இளம் கலைஞனைக் கேளுங்கள்.  yanni, wim mertens ஆகியவர்களுக்குப் பிறகு Bogdan Ota தான்.  அவர் பிறந்த ருமானியாவில் வாழ வழியில்லாமல் நார்வே வந்து பிழைத்தவரை நார்வே உலகப் புகழுக்கு உரியவராக்கி விட்டது.  இப்போதும் கூட போக்தான் ருமானியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை. https://www.youtube.com/watch?v=Z4hprxm96Xc&feature=endscreen  

The Story of My Assassins…

Mario Vargas Llosa –வுக்கு நோபல் கிடைத்த போது ஏதோ எனக்கே கிடைத்து விட்டது போல் சுமார் நூறு நண்பர்கள் எனக்கு வாழ்த்து அனுப்பினார்கள்.  ஏனென்றால், கடந்த 30 ஆண்டுகளாக நான் யோசா பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  He does not belong to my school of thought.  நான் எந்தப்  பள்ளியைச் சேர்ந்தவனோ அதற்கு உரிய எழுத்தாளர்களான William Burroughs, Italo Calvino, Charles Bukowski, Kathy Acker, Georges Bataille, George … Read more

கரூர்

வரும் 13, 14 தேதிகளில் கரூரில் இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்துக்காக வருகிறேன்.  ஆனால் கரூரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நண்பர்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.  ஏனென்றால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது.  சென்ற முறை ஏற்காடு வந்த போது கோவையில் உள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பப்பட்டேன்.  அது தொடர்பாக பல தினங்கள் முன்பே எழுதியிருந்தேன்.  சந்திப்பதற்கு சுமார் 20 நண்பர்கள் விரும்பினர்.  நான் … Read more

குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர்

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர் தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும்யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும்சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப்பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்டமாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.  நிலாந்தன்  சோலைக்கிளி  யோ. கர்ணன்  அ.முத்துலிங்கம்  தமிழ்க்கவிமு. நித்தியானந்தன்  சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன்  ஸர்மிளா ஸெய்யித்  தேவகாந்தன்பொ.கருணாகரமூர்த்திஏ.பி.எம். இத்ரீஸ்   இராஜேஸ்வரி … Read more