சமையல்காரப் பெண்

என் தோழி வீட்டுக்குச் சென்ற போதுபார்த்தேன்இருபத்தாறு வயதாம்எலும்பின் மேல் போர்த்திய தோலாய்பதின்மூன்று வயது தோற்றம்பத்து வீடுகளில் சமைக்கிறாள்காலை ஆறரை, ஏழரை, எட்டரைஒன்பது, பத்து மணி.பிறகு மாலையில் ஐந்து வீடுநாலாயிரம் ஒரு வீட்டுக்குஅம்மாவுக்கு, தம்பிக்கு, தம்பி மனைவிக்கு,அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு…எல்லாம் இவள் கைகளில் திருமணம்?ஹா, கனவு கூட காண முடியாதஒரு உடைந்த கண்ணாடி சிறு வீடு, இரண்டு அறைகள்ஒரு அறையில் தம்பி குடும்பம்மற்றொரு அறையில் அவ்வப்போதுவந்து போகும் தங்கை குடும்பம்இவள்?வராந்தாவில், கழிப்பறை அருகேஒரு துணியில் படுக்கிறாள்இரவு முழுதும் கதவுகள் … Read more

ஏழு லட்சமும் இருநூறும்

ஜாக் ப்ரேவர்எனக்குப் பிடித்த கவிஅவனுடைய பரோல்ஏழு லட்சம் விற்பனைஎன் தொகுதி இருநூறு பிரதிகள் காரணம் தெரியும்,சொன்னால்பைத்தியம் என்கிறார்கள் ஆனால்,மௌனமே என்கவிதையின் மொழி

தூக்குக் கயிறு

நான் என்ன செய்து விட்டேனென்றுஎன்னைக் கயிற்றில் தொங்கவிடத் துடிக்கிறீர்?யாரும் செய்யாததையா செய்து விட்டேன்?அடித்தால் செத்து விடுவாளெனக் கண்டேனா? வேலை செய்து செய்து என் கரங்கள் இரும்பாகிவிட்டன, அது என் பிழையா?அவளென்ன, என்னைக் கொஞ்சமா சித்ரவதை செய்தாள்?எந்த வேலை சொன்னாலும் உருப்படியாய்ச் செய்ததில்லை. எப்போதும் ஒரு யோசனைஎந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கிறாய்சொல், ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம்என்றால் ஒரு பதிலும் வராது சமைக்கச் சொன்னால்,தெருநாயும் சீந்தாத ஒரு சாப்பாடுநான் சமைத்தால் பன்றி போல் தின்கிறாள் மனித வாழ்வில் உணவுக்குப் … Read more

தொலைபேசி எண்

அடையாள அட்டை நாற்பது வயது என்கிறதுபார்க்க அறுபதைத் தாண்டியவனாகத் தெரிந்தான்சிரியன்அருகே மகள், பதினான்கு வயதுமனைவியும் மற்றுமிரு மகள்களும் உண்டென்றான்நாட்கள் பலவாய் உணவில்லைபொய்யில்லை, பார்த்தாலே தெரிகிறதுஅகதி உதவி வேண்டி நிற்கிறான் ஒரு நாளில் முப்பது பேர்அதற்கு மேல் இல்லை என்கிறது எங்கள் விதிஉதவி வேண்டி வருவோரோ தினசரி முந்நூறு இவனை எப்படி வெளியேற்றுவது?முன்னுரிமையில் இவனே கடைசி.போரில் கணவனை இழந்துஇரண்டு மூன்று சிசுக்களோடுவரும் பெண்களெல்லாம் உண்டு எடுத்துச் சொன்னேன்ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்அதிலிருந்தது ஒரு தொலைபேசி எண் நகரத்தின் விபச்சாரத் … Read more

ஹம்ரா தெரு

பெய்ரூட்டின் பிரதான ஹம்ரா தெருநானும் அமல்ராஜும் நடந்து கொண்டிருக்கிறோம்ஒரு உணவு விடுதியின் வாசலில் அமர்ந்துஒரு ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅவர்களுக்கு எதிரே ஒரு பெண்தன் வலதுகரத்தை நீட்டிக்கொண்டிருக்கிறாள்பதின்மூன்று வயது இருக்கலாம்ஹிந்திப்பட ஹீரோயின் தோற்றம்ஜோடி அவளை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதுஅதிர்ச்சியுடன் அமல்ராஜைப் பார்க்கிறேன்சிரியா என்கிறார்.

வீடற்றவர்கள்

எதிர்வீடு தனிவீடுசுற்றி ஒரு தோட்டம்நாலரை கோடி பெறும்ஒரு என்னாரய் வாங்கினான்பன்னிரண்டரை கோடிக்கு வீட்டின் வெளியே நடைபாதைஅதிலே ஒரு தார்ப்பாலின்அங்கே வசித்த இரு மூதாட்டிகள்வெளிகேட்டுக்குப் பூட்டு இல்லைதோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிசெடிகளுக்கு உயிர் கொடுத்தார்கள் என்னாரய்க்குமடியில் பணத்தின் கனம்மனசில் பூட்டின் கனம்இருவரையும் துரத்தி விட்டுகேட்டுக்குப் போட்டான் பூட்டு இப்போது செடிகள் எலும்புக்கூடுகள்தோட்டம் ஒரு பிணக்காடு நான் ஒரு மண்புழுபுழுதியில் புரள்பவன்ஏதும் செய்ய ஏலாதுஅறம் பாடினேன் ஆனால் எதிர்வீட்டு என்னாரய்அறத்தைப் பார்த்தான்அதற்கும் ஒரு பூட்டைப் போட்டுஎங்கோ போட்டான் தூக்கி…