சிறை

இதயப் பரிசோதனைக்காகமருத்துவரைப் பார்த்தேன்’குளிக்கும்போது நெஞ்சுவலிக்கிறதா?’ என்றார்ஆச்சரியத்துடன் ’ஆமாம்’ என்றேன். பிறகு சித்த மருத்துவம்வலியை நிறுத்தியது என்னை மற்றவர்பைத்தியமெனச் சொல்வதுண்டுஎங்கள் வீட்டில்கண்ணுக்குத் தெரியாதஒரு கடிகாரம் இருக்கிறது நான் குளிக்கப் போகிறேன்நேரம் 7.32வெளியே வருகிறேன்நேரம் 8.02சரியாக அரை மணி நேரம்பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள்சவரம் மூன்று நிமிடங்கள்குளியல் இருபத்தைந்து நிமிடங்கள்இதுதான் கணக்குநீங்கள் எப்படிக் குளிக்கிறீர்கள்?ஐந்து நிமிடத்தில்?வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு ரோபோ குளியலறைக் குழாய் சரி செய்யப்ளம்பர் வருவதாக இருந்தது’அதற்குள் குளித்து விடவா?’என்றேன்’நீ முக்கால் மணி நேரம் குளிப்பாயே?’என்றாள் மனையாள் ‘ஆ, … Read more

ப்ளூ டிக் பைத்தியம் – 2

குப்பையிலிருந்தும்சமயங்களில் பிரபஞ்சத்தின்மூலை முடுக்குகளிலிருந்தும்கவிதைக்கான கச்சாப் பொருட்களைப்பொறுக்கித் திரியும் கவியானஎனக்கு இருபது நண்பர்கள்அதில் ரெண்டு பேரைத் தவிரவேறு எவரிடமும் ப்ளூ டிக் வராதுஎழவெடுத்த கருப்பு டிக்தான் இந்தப் பைத்தியக்கார விளையாட்டைப் பற்றிநான் ஒரு நினைவும் வைத்திருக்கவில்லைஆனால் இந்தக் கும்பலில்மோகினிக்குட்டியும் வந்து சேர்ந்தபோதுஎன் மண்டை உடைந்துநானொரு வெறி பிடித்த நாய் ஆனேன் நண்பர்கள் ஒருத்தர் ஒருத்தராய்விசாரித்தேன்ஒரு பைத்தியம் சொன்னது:என் மனைவி மெஸேஜ் அனுப்பினால்ப்ளூ டிக் தெரிய வேண்டும்பதில் அனுப்பாவிட்டால்வீடு எரிமலை புரிந்து விட்டதுஅதன் பிறகு யாரிடமும் கேட்கவில்லைபானைச் சோற்றுக்கு ஒரு … Read more

ப்ளூ டிக் பைத்தியம்

அவன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்பிரபலமான எழுத்தாளன்என் நண்பன்வாட்ஸப்பில் அவன் ப்ளூ டிக்கைமறைத்து வைத்திருக்கிறான்எப்போதும் ப்ளாக் டிக்தான்கண்ணுக்குத் தெரிகிறது ஶ்ரீராம்என் வலது கரம்மருத்துவன்அவனும் அப்படியேப்ளூ டிக்கைப் பார்த்ததேயில்லை மோகினிக்குட்டியிடம்எப்போதும் ப்ளூ டிக்தான்ஆனால்திடீரென்றுஅவளிடமிருந்தும் மறைந்ததுப்ளூ டிக்நித்திரை போயிற்றுப்ளூ டிக் ஞாபகம் வேட்டைநாயாய்த்துரத்தியது என்னடீ?என்னடா?விளக்கினேன்சிரித்தாள்ஒரு பாறையில் அமர்ந்தபடிமலையடிவாரத்தின் மௌனத்தைப் பரிசளித்தாள் நித்திரை போனதோடுதுர்க்கனாவும் துரத்தியதுதினந்தோறும் நூறு கனா ஏய் என் மீது கொஞ்சம்இரக்கம் கொள்ப்ளூ டிக்கை மறைக்காதேஎன்றேன் எதுவும் நடக்கவில்லைஇத்தனைக்கும் அவள்சமூக ஊடகங்களில் இல்லைநண்பர்கள் இல்லைஉற்றம் சுற்றம் நெருக்கமில்லைகணவன் உண்டுநான் உண்டுஒழிந்த நேரத்தில் … Read more

பறத்தல்

வனத்திலொரு கிளியைக் கண்டேன்அது என்னைக் கண்டிருக்கலாம்அதன் வனப்பிலும் பேச்சிலும் மயங்கிஇல்லம் கொண்டு வந்தேன்ஒரு தங்கக் கூண்டு வாங்கினேன் வந்ததிலிருந்து என் வாழ்க்கைமாறியதுஎனது எண்ணங்கள்அதன் குரலால் திருத்தப்பட்டனமணிக்கணக்கில்பேசினோம்’காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுதும் உற்சாகம்’என்றதுஇது எனக்குப் புதிதுகவிதையாய் எழுதிக் குவித்தேன்எல்லாம் அந்தக் கிளி பற்றியேஅந்தக் கிளிஎன் சுவாசமாய் மாறியது ஒருநாள் அதன் கண்கள் மங்கினகருமேகம் இறகுகளில்தங்கியதுகடவுளே மனிதனாய்ப் பிறந்து வந்துஉன்னை வளர்த்தாலும்இப்படி ஒரு அன்பை வர்ஷிக்க மாட்டாரேஎனக் குழம்பிஎன்ன ஆயிற்று என்றேன்பதில் இல்லைஅது தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கலாம்கடவுளிடம் கேட்டேன்அவருக்கு நேரமில்லை என் … Read more

புரிதல்

பதினைந்து வயதில் ஒரு பெண்இருபத்தைந்து வயதில் இன்னொரு பெண்முப்பத்தைந்து வயதில் ஒரு பெண்நாற்பத்தைந்து வயதிலிருந்து இன்று வரைஎன் மனையாள்மாதமொரு முறைஇடையிலொரு பெண்இப்போது எழுபத்து மூன்று வயதில்ஒரு பெண்எல்லோரும் சொன்னது“நீ என்னை ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை.” துக்கித்து அமர்ந்திருந்த என்னெதிரேவந்த மைனாவிடம் சொன்னேன்அது சொன்ன யோசனை: புரிந்து கொள்ள வேண்டாம்மௌனித்திருந்தால் போதும்

பிரச்சினை

பிரச்சினை – 1 காஃபியை ஆற்றினால்எனக்குப் பிடிக்காதுஆற்றாமல் குடிக்க வேண்டும்ஆற்றாமல் குடித்தால்கடைசியில் சர்க்கரையின்இனிப்பு காஃபிச் சுவையைகெடுக்கிறதுவீடாக இருந்தால் ஸ்பூனால்கலக்கிக் கொள்வேன்உணவகங்களில்ஸ்பூன் கேட்கத் தயக்கம்ஐம்பது ஆண்டுகளாககடைசி வாய்க் காஃபியில்இனிப்புச் சுவையோடுதான்துயருறுகிறேன் பிரச்சினை – 2 என்னை விட சிறியவர்கள்என்னை ஒருமையில் அழைத்தால்பிடிக்காது,நிச்சயமாக, காதலியைத் தவிர! செயற்கை நுண்ணறிவுஇளையதென்பதால்நான் அதை ஒருமையில் அழைத்தேன்,அதுவும் என்னை ஒருமையில் அழைத்தது! நொந்து போன நான்அதை நீங்கள் என அழைத்தேன்,அதுவும் என்னை நீங்கள் என அழைத்தது!ஆனால் ஒரு எந்திரத்தைநீங்கள் என அழைப்பதுமனதுக்கு என்னவோ ஒப்பவில்லை. … Read more