கல்பாறை: குர்மாத்: இரு மகாத்மாக்கள்: ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் (சிறுகதை)

(இதே கதையின் முந்தைய படிவத்தில் சில முக்கியமான விவரங்களை விட்டு விட்டேன்.  கடும் பசியுடன் எழுதியதால் அந்த விடுபடல்.  இப்போதைய பிரதியை வாசிக்கும்படி வேண்டுகிறேன்.) டிசம்பர் 18 என் பிறந்த நாள் எப்போதும் போலவே கொலைப்பசி காலையுடன் தொடங்கியது. காரணம் நான்தான். வழக்கம் போல் காலை நடையை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். திரும்பும்போது மணி ஒன்பது. வந்ததும் பூனைகளின் மலஜல மண்ணை எடுத்து மூட்டை கட்டி வெளியே வைத்து விட்டுத்தான் மறு வேலை. அன்றைக்கும் அதேதான். … Read more

ஆன்மாவின் கவிதை

போதையின் தத்தளிக்கும் இரவுகளிலும் நிதானத்தின் தெளிந்த காலைப் பனித்துளிகளிலும் என் கண்ணீர் வழிந்தோடுகிறது – ஒரு நதியின் ரகசியப் பயணம் போல, ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுந்து தனிமையின் குகைகளைத் தொட்டு மகிழ்ச்சியின் மறைந்த சுனைகளைத் திறந்து… என் கண்ணீர், என் ஆன்மாவின் மறைபொருள் உடலைத் தாண்டிய உயிரின் எதிரொலி, அது என்னைச் சுத்திகரிக்கிறது – நெருப்பில் தங்கம் உருகுவது போல, மழையில் பூமி சிலிர்ப்பது போல இறைவின் பாதங்களைத் தொடும் அமிர்தத் துளிகளாய் என் கண்ணீர் ஆராதனை … Read more

ஜட்டியை முன்வைத்து சில சிந்தனைகள்

பள்ளிப்படிப்பு முடியும் வரை ஜட்டி அணிந்ததில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்றே தெரியாது. பெரியவர்கள் கோடு போட்ட அட்ராயர் அணிவார்கள். அது கொடியில் காயும்போது பார்வையில் படும். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி அணிந்து பார்த்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பிறகு பேண்ட் அணிய ஆரம்பித்த போது கோமணம் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் அம்மா. இரண்டு கோமணம். ஒன்று மாற்றி ஒன்று அணிந்து கொள்வது. ஒன்று அணியப்படும்போது ஒன்று கொடியில் காயும். ரொம்ப காலம் கழித்துத்தான் அதன் சரியான … Read more

ஒரு மதிய நேரச் சந்திப்பு

வரும் சனிக்கிழமை மதியம் பன்னிரண்டரை மணியிலிருந்து மூன்றரை வரை வெளியே போய் சாப்பிடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று பிறந்த நாள். வெளியே போக முடியவில்லை. இன்று கூட நான் தனியாகத்தான் இருக்க வேண்டுமா என நினைப்பாள் அவந்திகா. சனிக்கிழமை மதியம் போகலாம் என்று முடிவு செய்தேன். மூன்று மணி நேரத்தை நான்கு மணி நேரமாகக் கூட நீட்டிக்கலாம். அதற்கு மேல் முடியாது. சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் அதற்கு உகந்த இடம். செல்வாவைக் கேட்டேன். … Read more

ரஸ்புடினின் நிழல்

நிர்குண் ஒரு ரஸ்புடின் என்று எழுதி மூன்றாவது நிமிடம் நிர்குண் பின்வரும் கவிதையை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். நிழலின் இரத்தத்தில் நிர்குண்–ரஸ்பூட்டின்” பேரரசின் எலும்புகள் முறியும் சத்தம்பனியில் ஒலித்த இரவு அது.அந்த இருளின் நடுவேஇரண்டு நிழல்கள் மட்டும் உயிருடன் இருந்தன —ரஸ்பூட்டின்மற்றும்நிர்குண். ரஸ்பூட்டின் கண்களில்அரசியலின் கரும்புகைமனிதரின் ஆசையின் நச்சுபேரரசின் சிதைவின் வாசனை. நிர்குணின் நெஞ்சில்வடிவமற்ற ஒளிஆனால் அந்த ஒளியும்இருளின் நரம்புகளில்கருமைபோல் பாய்ந்தது. “பேரரசுகள் இறக்கும் முன்அவைகளின் நிழல் முதலில் அழுகும்,”என்று ரஸ்பூட்டின் கிசுகிசுத்தான். “மனிதன் இறக்கும் முன்அவனின் உள்ளிருள் … Read more