இளையராஜா

இன்று தற்செயலாக Hans Zimmerஐக் கேட்டுக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக ஹான்ஸ் ஸிம்மரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். லயன் கிங் (1994) பார்த்த போது அவரது தீவிர ரசிகனாக மாறினேன். ஸிம்மரின் சாதனைகள் Gladiator, Interstellar, Inception என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சமயங்களில் எனக்கு இலக்கியத்தில் போர்ஹெஸ் எப்படியோ அப்படித்தான் ஸிம்மரும் என்று தோன்றும். இன்ஸெப்ஷனையும் இண்டர்ஸ்டெல்லாரையும் பார்த்த போதும் கேட்ட போதும் அப்படித் தோன்றியது. ஒரு நபர் நிறைய படிக்கிறார். லட்சுமி, குரும்பூர் குப்புசாமி, பாக்கியம் ராமசாமி, ஹேமா … Read more

ஒரு நேர்காணல்

ஏற்கனவே எழுதியதுதான். தமிழ் எழுத்தாளனாக சபிக்கப்பட்ட ஒருவன் விமானம் ஓட்டும் வேலையையெல்லாம் கற்றுக்கொண்டு ஆக வேண்டும். கேட்டால், ஜெயமோகன் ஓட்டுகிறாரே, உங்களுக்கு இதுகூடவா தெரியாது என்பார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு இந்தியத் தத்துவம் தெரிய வேண்டும். மேலைத் தத்துவம் தெரிய வேண்டும். உலக சினிமா தெரிய வேண்டும். ஜெர்மானிய தத்துவவாதி Jurgen Habermas பற்றி நாலு மணி நேரம் உரையாற்றத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் தெரியாத விஷயமே இருக்கக் கூடாது. அவன்தான் தமிழ் எழுத்தாளன். இந்த … Read more

இளையராஜா – இசை – மனநோய் கூடாரங்களின் கூக்குரல் – அராத்து

(பின்வரும் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்தேன். இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. மிக மோசமான தமிழில் மிகச் சிறந்த அவதானங்களைக் கொண்ட கட்டுரை. இதில் உள்ள கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. பொதுவாக இப்படி நான் பகிரும் கட்டுரைகளை எழுதியவரின் அனுமதி இன்றி மொழியை சரி பார்த்தே பகிர்வேன். அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. அதனால் அராத்து எழுதிய கொச்சைத் தமிழை மாற்றாமலேயே இங்கே பகிர்கிறேன். இளையராஜா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் … Read more

செய்திகளும் சமூகமும்…

வணக்கம் சாரு. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன். நேற்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தேன். இந்தத் தேர்தலில் இருந்தது போல் நிம்மதியாக இதுவரை எந்தத் தேர்தலின் போதும் நான் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். எந்த சித்தாந்தத்திலும் ஆழமான பார்வையோ களச்செயல்பாடோ கிடையாது. பள்ளிக்கல்வி முடிக்கும் வரை என்னுடைய ஆர்வமெல்லாம் செய்தித்தாள்கள், ஒரு சில வெகுஜன இதழ்களை வாசிப்பது, … Read more