தி இந்து – தீபாவளி மலர் குறித்து : செல்வகுமார் கணேசன்

வாசகர் வட்டத்தில் செல்வகுமார் எழுதியிருப்பது: தி இந்து-தீபாவளி மலரில் சாரு எழுதிய பக்கங்கள் மட்டும் கலர் ஃபுல்லாக இருக்கு. (பின்னே, தமிழ் சினிமாவின் கதாநாயகிகளை பற்றி அல்லவா எழுதியிருக்கிறார்) நஸ்ரியாவை, த்ரிஷாவை பற்றி சாருவை தவிர வேறு எந்த முன்னணி இலக்கியவாதியும் கருத்து சொல்வார்களா என்பது சந்தேகமே. அவர்களின் கௌரவ வேடமே அதை தடுத்துவிடும். உ.த.எ இமயமலை பற்றி கொஞ்சமும், வரலாறு, புவியியல், ராணுவம், சுயபோகம், சாரி, சாரி, சுய அனுபவம் குறித்து அதிகமாகவும் ஒரு கட்டுரை … Read more

ரிஷி மூலம்

இப்போதைய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் யார் என்று கேட்டால் நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கும்.  அந்த அளவுக்கு சமகாலத் தமிழ் எழுத்து சோர்வடையச் செய்வதாக உள்ளது.  இருந்தாலும் நல்ல எழுத்து வரும் போது நான் அதைப் படிக்கத் தவறுவதில்லை.  அப்படி நான் வேண்டி விரும்பிப் படிக்கும் ஒருவர் தேவி பாரதி.  அவருடைய காந்தி என்ற நீண்ட சிறுகதையை காலச்சுவடில் படித்த போது அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன்.  அவருடைய கிராமமான வெங்கரையாம்பாளையத்துக்கு நேரில் சென்று அவரோடு தங்கியிருந்து … Read more

ஒரு கடிதம்

அன்பின் சாரு அவர்களுக்கு, என் பெயர் அருண், மதுரையை சேர்ந்தவன். தற்பொழுது ஒரு சிறிய சைவ உணவகத்தின் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் ஈஷா யோகாவின் வகுப்புகள் முடித்தவன். ஜக்கி வாசுதேவின் போதனைகளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை. மனிதர்களில் இப்படி ஒரு வெளிப்படையான ஆளா ? என்று வியக்க வைத்தவர் நீங்கள்.உங்களை பற்றி எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும். அவை அனைத்தையும் … Read more