Digimodernism – First footprint

  தோள் வலிக்கிறது; கொஞ்சம் அமுக்கி விடு என்று என் வாழ்நாளில் இதுவரை என் மனைவியிடம் கூடக் கேட்டதில்லை. ஆனால் என்னுடைய ஒரு நண்பனிடம் கேட்டிருக்கிறேன். 25 வயதான அவனை என் வளர்ப்பு மகனாகவே கருதுகிறேன். அந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நெருங்கிய நண்பன். போன வருஷம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றான். அவன் எழுதிய முதல் நாவல். திட்டினாலும் பரவாயில்லை என்றான். அதைச் சொல்லவும் … Read more

தங்க்லீஷ்

கை கால் கண் இல்லாதவர்களையெல்லாம் கொன்று விட வேண்டும் என்று சொல்லியது பாலாவின் நான் கடவுள் படம்.   பச்சையான ஃபாஸிஸம் அது.  தங்க்லீஷில் எழுதலாம் என்பதும் ஃபாஸிஸமே.  தங்க்லீஷில் எழுதுவது தாயைக் கூட்டிக் கொடுப்பது போன்றது. இதற்கு மேல் எழுத என் சினம் என்னை அனுமதிக்க மறுக்கிறது…

படித்ததில் பிடித்தது…

அமெரிக்காவில் இருக்க முடியவில்லை என்று இந்தியாவுக்குத் திரும்பி வரும் நண்பர்களை நான் எப்போதுமே வியப்புடன் பார்ப்பது வழக்கம்.  இந்தியா மனிதர்கள் வாழ முடியாத ஒரு இடமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன.  இதற்கு எல்லோரும் எப்போதும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம்.  ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல;  ஒவ்வொரு பிரஜையும் இந்த இழிநிலைக்குக் காரணம்.  சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நாம் வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் தருணத்தில் நம் பின்னாலிருந்து தொடர்ந்து ஹார்ன் அடிப்பவனும் … Read more

பற்று… பற்று அற…: செல்வகுமார் கணேசன்

தேசம், மொழி, இனம், மதம் – இவற்றின் மீது சாருவின் பற்றற்ற தன்மை நமக்குத் தெரியும். இவற்றை முன்னிட்டு மனிதன் வேறுபடக்கூடாது என்பதே அவர் எழுத்தின் அடிப்படை. அதேசமயம், மொழியின் சிதைவை, பிரதேசத் தனித்தன்மைகளின் சிதைவை, பழைமை கலாச்சாரங்களை மறப்பதை அவர் கண்டித்தும், சுட்டிக்காட்டியும் வருகிறார். உதாரணமாக தீபாவளி வாழ்த்துகள் கட்டுரையில் அவர் சுட்டுகிற விஷயங்களை சற்றே கவனித்தால் இது புரியும். நான் நீண்ட காலம் இதை முரண் என்றேக் கருதி வந்திருக்கிறேன். மொழிப்பற்று இல்லாதவன் மொழிச்சிதைவை … Read more

தீபாவளி வாழ்த்துக்கள்…

நாம் மேற்கத்திய நாகரீகத்தை அரைகுறையாகக் காப்பியடித்துப் பின்பற்ற ஆரம்பித்ததிலிருந்து வாராவாரம் சனிக்கிழமை செய்யும் எண்ணெய்க் குளியலை அடியோடு மறந்து போனோம்.  ஒரு ஆடவனுக்கு இளமையில் தாயும், பிற்பாடு தாரமும் எண்ணெய்க் குளி செய்விப்பார்கள்.  இதில் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  தலைக்கு செமத்தியான மஸாஜ் கிடைத்தது.  தலைக்கு மஸாஜ் செய்து கொள்வது தேக நலத்துக்கு எவ்வளவோ நல்லது.  இதையெல்லாம் நம் முன்னோர் ப்யூட்டி பார்லர் வைத்து மஸாஜ் செய்து கொள்ளவில்லை.  தானாக, வெகு இயல்பாகவே அது நம்முடைய அன்றாட … Read more

ஜெயமோகனின் ’இமாலயப்’ பொய்கள்

ஒரு கட்டுரையில் சில பிழைகள் இருப்பது சாதாரணமான விஷயம்தான்.  ஆனால் ஜெயமோகன் தனது இணைய தளத்தில் எழுதும் இமயமலைப் பயணத் தொடரில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏராளமான பிழைகளைச் செய்வதால் அவர் லே நகரை மட்டும் பார்த்து விட்டு இமயமலைப் பயணத் தொடரை எழுதி வருவதாகப்  பலரும் கருதுகிறார்கள்.  இது பற்றி நானும் ஒன்றும் கவலைப்படவில்லை.  இமயமலை ராஜஸ்தானில் இருக்கிறது என்று கூட எழுதட்டும், நமக்கென்ன என்றே இருந்தேன்.  ஆனால் பல லட்சம் பேர் படிக்கக் கூடிய தி … Read more