நேற்று இரண்டு கட்டுரைகள் எழுதினேன். அதில் ஒரு கட்டுரை மட்டும் ஐந்து மணி நேரத்தை எடுத்துக் கொண்டது. இசை பற்றிய கட்டுரை. கேட்ட பாடல்களாக இருந்தாலும் அது பற்றி எழுதும்போது மீண்டும் கேட்க வேண்டும் அல்லவ
இன்னொரு கட்டுரை, ஆத்மாவின் குமுறல். இரண்டையும் பற்றி யாரிடம் பேசுவது? பேச யாரும் இல்லை. எழுதி முடித்து ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் ஒரு நண்பரை அழைத்தேன். இன்னும் படிக்கவில்லை என்றார். இன்று காலை அழைத்தேன். வேறு ஏதோ லௌகீகப் பேச்சு ஓடியது. கட்டுரை படித்தீர்களா என்று வாய் விட்டுக் கேட்டேன்.
படித்தேன் என்றார்.
திரும்பவும் எனக்கு ஜெயமோகன் ஞாபகமே வந்தது. அசோகமித்திரனின் மரணம் என்னைப் போலவே ஜெயமோகனையும் மிகவும் பாதித்து விட்டது. மனுஷன் மூன்று தினங்கள் துயரத்தில் கிடந்திருக்கிறார். அப்போது ஆசுவாசம் தேடி, சாருவின் ப்ளாகைப் பார்க்கலாம், ஏதாவது பாடல் லிங்குகளைக் கொடுத்திருப்பார் என்று இந்தப் பக்கம் வந்தாராம்.
அந்த மாதிரி எந்த மூத்த எழுத்தாளனாவது செத்து, எந்த இளைய எழுத்தாளனுக்காவது மன உளைச்சலாகி, என் ப்ளாக் பக்கம் வந்து நான் கொடுத்திருக்கும் பாடல்களைக் கேட்டால்தான் உண்டு… முன்பெல்லாம் யாராவது அரசியல் தலைவர் செத்தால் ஆல் இண்டியா ரேடியோவில் நாள் பூராவும் ஷெனாய் போடுவார்களே, அதைப் போல…