என் சிறுகதைத் தொகுதிகளில் மிகவும் கொண்டாட்டமாக எழுதப்பட்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. செப்பனிட்டு, லேஅவ்ட் ஆர்ட்டிஸ்டுக்கு அனுப்பி விட்டேன். இன்னும் இரண்டு வாரத்தில் இந்த நூல் உங்களுக்குக் கிடைக்கும். புத்தகத்தின் பின்னட்டையில் வழக்கம்போல் நூலைப் பற்றிய சிறு குறிப்பு என் நேர்த்தியான கையெழுத்தில் இருக்கும். என் காலத்தில் பள்ளிகளில் கையெழுத்துக்கென்றே பயிற்சிப் புத்தகம் உண்டு. இப்போது உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் உயர்தரமான ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் முத்துமுத்தாக ஆங்கில மொழியை எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் எழுதும் பலர் மிக அழகாக எழுதுவதைப் பார்த்திருக்கிறேன்.
