புத்தக விழா – 3

பழங்களில் எனக்குப் பிடித்தது எலந்தப் பழம். ஆனால் அது பரவலாகக் கிடைப்பதில்லை. புத்தக விழா நடக்கும் இடத்தின் மைதானத்தில் ஒரு அம்மாள் கூடையில் எலந்தப்பழம் விற்பார்கள். வருடா வருடம் புத்தக விழா நடக்கும்போது சமயம் கிடைக்கும்போது அதை வாங்கித் தின்பது வழக்கம். நேற்று புத்தக விழா முடிந்து வெளியே வந்து வாங்கும்போது போலீஸ் வந்து அந்தப் பெண்மணியை விரட்டி விட்டார். இருந்தாலும் என் நண்பர் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்று வாங்கிக் கொண்டு வந்தார். நாலைந்து பேர் இருந்தோம். யாரும் என் அளவுக்கு ஆர்வமாக என்னிடமிருந்து வாங்கிச் சாப்பிடவில்லை என்பதை கவனித்தேன்.

இன்று நாலரை மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன்.