ஃப்ரான்ஸும் நானும் – 7

பசி கடவுளின் அருளைப் பெற்றது. பசியைப் பேசுபவன் ஞானி. பசியைப் போக்குபவன் வள்ளல். சமூகம் அவர்களைப் போற்றுகிறது. ஆனால் காமம் தீர்ப்பவள் வேசி. அவள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். இப்படியாக, ஆண்டாண்டு காலமாக காமத்திற்கு ஒரு சாபம் இருந்து வருகிறது. பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிபடுகிறான். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/05/1496601017 ‘Oedipus the King’ இணைப்பு: http://abs.kafkas.edu.tr/upload/225/Oedipus_the_King_Full_Text.pdf  

டச் வுட்

உப்புக் கருவாடு என்ற படத்தின் முதல் காட்சியின் போதுதான் ராம்ஜி நரசிம்மனைப் பார்த்தேன்.  பக்கத்தில் இயக்குனர் ராதா மோகன்.  ராம்ஜி பற்றி ஏற்கனவே காயத்ரி மூலம் அறிந்திருந்தேன்.  ஒருபோதும் அவரிடம் பழகி விடக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  காரணம், அவர் ஒரு தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர்.   அந்த இரண்டு தொழில்களிலும் இருப்பவர்கள் மீது நமக்கு ஒரு மன பிம்பம் இருக்கிறது அல்லவா, அதுதான் அப்படி நான் நினைத்ததற்குக் காரணம்.  அதனால் கொஞ்சம் ’தள்ளியே’ நின்று பேசினேன்.  படம் எப்படி … Read more

ஃபாசிசம் : கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது: இந்தத் தடை விவகாரத்தில், இது என்ன மாதிரி விளைவுகளை, உரையாடல்களை சமூகத்தளத்தில் ஏற்படுத்துகிறது என பிஜேபி சோதனை செய்துபார்க்கிறது. ஆக, புதிய நெறிமுறைகள் என்ற பெயரில் மறைமுகமாக இந்த தடை அறிவிக்கப்பட்டவுடன் இங்கு நிகழத் தொடங்கிய உரையாடல்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக அரசு எதை பேசலாம் எதைப் பேசக்கூடாது என்கிற நவீன அரசியலின் அடிப்படையை அறியாதவர்க்ள் ‘வேத காலத்திலேய பசுவைப் புசிப்பது இருந்தது…’ என்று உளறத்தொடங்கியது. இரண்டாவது ‘அதில் கொழுப்பு … Read more

ஃபாசிசம்

மக்கள் கூட்டம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் ஃபாஸிஸ்டுகளைப் பற்றி ஜெகதீஷ் முகநூலில் எழுதியிருப்பது: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம்/விலையை கண்காணிப்பது என்பது ‘மக்களின் நலனுக்காக‌ ஆட்சி’ செய்யும் எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். நான் பார்த்த வரையில் இந்தியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் இந்த கண்காணிப்பு ஆத்மார்த்தமாக நடைபெறுகிறது. உதாரணத்துக்கு இங்கு அரேபியாவில் அடிப்படை அத்தியாவசிய உணவுப் பொருளான ரொட்டி மாவு விலையை அரசு கண்காணிக்கிறது. முழுவ‌தும் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடு … Read more