To You Through Me (3)

நகுலனின் இயற்பெயர் T.K. துரைஸ்வாமி.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.  ஆங்கிலப் பேராசிரியர்.  ஆங்கிலத்தில் எழுதியவர்.  அவர் எழுதிய ஆங்கிலக் கவிதைகள் நூல் வடிவில் இணையத்தில் கிடைக்கிறது.  எனக்கு நண்பர் முத்துக்கிருஷ்ணன் அனுப்பியிருந்தார்.  ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம். https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011522_Words_to_the_listening_air.pdf

To You Through Me (2)

சி.சு. செல்லப்பாவின் உறவினரான பாலசுப்ரமணியன் என்னுடைய மூத்த நண்பர்.  பெங்களூரில் இருக்கிறார்.  அவர்தான் இந்த இணைப்பை இன்று அனுப்பினார்.  வருடத்தைப் பாருங்கள்.  உடுமலை டாட் காமில் நகுலன் புத்தகங்கள் கிடைக்கின்றன என்றும் தகவல் அனுப்பியிருக்கிறார்.  நற்றிணையிலும் காலச்சுவடுவிலும் நகுலனின் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.  இணையத்திலும் சிலது கிடைக்கலாம்.  சரியாகத் தெரியவில்லை.  (கோட்ட விளையில் நடந்த ‘வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28, 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை) வேத மனவெளியில் அலைவுறுதல் மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் … Read more

To You Through Me (1)

நேற்றைய சந்திப்பு பற்றி பலரும் உற்சாகமாக எழுதியிருந்தார்கள்.  செல்லப்பா பற்றி முதலில் இரண்டு மணி நேரம் பேசினேன்.  இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியது இதுவே முதல் முறை.  இதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் பற்றி ஒரு கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசியதுதான் அதிக பட்சம்.  ஆனால் நேற்றுதான் ஒரு விஷயம் தெரிந்தது.  நேரம் இருந்தால் – அதாவது உங்களுக்குப் பொறுமை இருந்தால் – ஐந்து மணி நேரம் கூட விடாமல் பேசலாம் என்பதே அது.  நேற்றே … Read more

கேள்விகள்

செல்லப்பா பற்றிய உரைக்குப் பிறகான விவாதத்தில் கேட்கப்படவிருக்கும் கேள்விகளை அனுப்பியவர்கள் கோபிநாத், வளன், நேஹால், சின்னய்யா, அர்ஜுன் மோகன். இவர்கள் தவிர வேறு யாரேனும் கேள்விகள் அனுப்பினீர்களா? அனுப்பியிருந்தால் மீண்டும் அனுப்பி வைக்கவும். அல்லது, சந்திப்பில் கேட்கலாம். சந்திப்பில் ஒருவேளை நேரம் இல்லாமல் போகலாம். எனவே அனுப்பி விடுவது உசிதம். கேள்விகளைத் தொகுத்து டெஸ்க்டாப்பிலும் மொபைல்போனிலும் வைத்துக் கொண்டேன். மின் தடை இருந்தால் மொபைல் மூலம் ஸூமில் பேசலாம். ஆனால் காலை நேரத்தில் அப்படி ஆக சாத்தியம் … Read more

சி.சு. செல்லப்பா

இந்திய நேரத்துக்கு நாளை காலை இந்நேரம் சி.சு. செல்லப்பா இலக்கிய உரை நிகழ்ந்து முடிந்திருக்கும். உண்மையில் இது போன்ற ஒரு தலைப்பில் நான்கு ஐந்து மணி நேரம் கூட உரையாற்ற முடியும் என்பது சுதந்திர தாகம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தோன்றியது. டிசம்பர் 31 மாதிரி ஒரு இரவில் முழு இரவும் கூட அப்படி உரையாடலாம். ஸூம் மாதிரி ஒரு ஏற்பாட்டின் மூலம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக புத்தாண்டு இரவுகளில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி … Read more

Zoom meeting – சி.சு. செல்லப்பா

இந்திய நேரம் காலை ஆறு மணி ஞாயிற்றுக் கிழமை அன்று (31.5.2020) Zoom மூலம் சி.சு. செல்லப்பா பற்றி பேச இருக்கிறேன்.  முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.  பாஸ்வேர்ட் போன்ற விபரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  இதை ஒருங்கிணைப்பவர் சதீஷ்வர்.  இந்திய நேரம் அமெரிக்காவில் எப்படி என்று அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.   அதேபோல் ஐரோப்பாவில் வசிக்கும் நண்பர்களும்.  இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷிய நண்பர்களையும் அழைக்கிறேன்.  நேரத்தை உங்கள் உங்கள் தேச நேரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.     … Read more