Uncategorized
பூச்சி 78
பூச்சி முடிந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது. என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று. ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள். மூர்க்கன், முரடன் இப்படியான பல பெயர்கள் உண்டு. என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். என் எழுத்தை மதிக்காதவர்களால் கூட சாரு அன்பானவர் என்று சொல்லப்படக் கூடிய ஒரு ஆள், எப்படி மூர்க்கன் என்றும் முரடன் என்றும் … Read more
To You Through Me (5)
வரும் 28-ஆம் தேதி காலை நகுலன் பற்றிய பேச்சுக்கான கேள்வி நேரத்துக்காக நண்பர் அழகராஜா ஒரு முக்கியமான கேள்வியை அனுப்பி வைத்திருந்தார். நீங்கள் நகுலன் பள்ளி என்று உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அப்படியானால் சுந்தர ராமசாமியைப் படிப்பீர்களா? நீங்கள் நகுலன் பள்ளி என்று சொல்லும்போது உங்களைப் பின்பற்றும் உங்கள் வாசகர்களை நீங்கள் சுந்தர ராமசாமியிடமிருந்து விலக்குகிறீர்கள் என்று அர்த்தமாகாதா? அது போக, நகுலன் பள்ளியில் இருந்து கொண்டே சுந்தர ராமசாமியையும் படித்தால் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? … Read more
அமெரிக்காவில் அடியேனின் புத்தகங்கள்
நீண்ட காலமாக அமெரிக்க வாழ் தமிழர்களிடம் என் நூல்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்தேன். அவர்கள் இங்கே தமிழ்நாடு வரும்போது வாங்கினால்தான் உண்டு. ஆனால் அவசரகதியில் வந்து செல்பவர்களால் புத்தகம் வாங்க எல்லாம் நேரத்தை ஒதுக்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் அவர்களுக்கு என் புத்தகங்கள் கிடைக்கவில்லை. அவர்களும் படிக்கவில்லை. இந்த நிலையில் என்னுடைய முப்பது நூல்கள் – ஒவ்வொரு நூலும் 0.99 டாலர் விலையில் – அதாவது ஒரு டாலர் – கிண்டிலில் கிடைக்கிறது. அச்சு … Read more
பூச்சி 77
பூச்சி தொடரின் போது எனக்கு வந்த வசை கடிதங்களைப் பற்றி நான் எப்போதுமே உங்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதங்களை நான் படிப்பதில்லை. ஏன் படிக்க வேண்டும்? மேலும் நம்மைப் பற்றி ஒருத்தர் திட்டி எழுதுவது என்பது அவருடைய நோய்மை. என் எழுத்து பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். அதுதான் ஒரு நாகரீகமான மனிதனுக்கு அழகு. நாம் செத்த எலியைப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிப் போகிறோம். ஆனால் காக்கைக்கு அது உணவு. அப்படி நமக்குப் … Read more
To You Through Me (4)
முதலில் நகுலனின் நாவல்களை எடுத்து வைத்துக் கொள்வோம் என்று என் புத்தக அடுக்குகளில் தேட ஆரம்பித்தேன். இரண்டு முழு தினங்கள் ஆயின. முதலில் இவர்கள் என்ற நாவல் சிக்கியது. 1983-இல் வெளிவந்தது. வெளியீடு நர்மதா பதிப்பகம். விலை ஒன்பது ரூபாய். அடுத்து சில அத்தியாயங்கள் என்ற மிகச் சிறிய புத்தகம். 26 பக்கம்தான். சில அத்தியாயங்கள் என்று போட்டு பிராக்கட்டில் நாவல் என்று உள்ளது. சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில். இதை நவம்பர் 1984-இல் வாங்கியிருக்கிறேன். இதில் நகுலனின் … Read more