வாசகர் வட்ட சந்திப்பு

நாளை மாலை ஆறரை மணிக்கு வாசகர் வட்ட சந்திப்பு உள்ளது. இது நினைவூட்டல். கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஐடி நம்பர், பாஸ்கோட் அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் எழுதவும். கலந்து கொள்ள விரும்பிய பல நண்பர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. ஒரே காரணம், அவர்களுடைய முதல் கடிதமே அதுவாகத்தான் இருக்கிறது. உங்களோடு எந்தப் பழக்கமும் இல்லாமல் எப்படி சந்திப்பில் இணைத்துக் கொள்வது? அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ஃபோன். எடுத்தேன். வாசகர். முதல் போன். … Read more

தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதுகள் பற்றி ஜெயமோகன்

இந்த அறிவிப்புகளுக்குக் காரணமாக அமைந்த இரண்டு கடிதங்களை (முதல்வருக்கு நான் குமுதத்தில் எழுதியவை) என் தளத்தில் வெளியிட்டிருந்ததை ஜெயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் அவருக்கு ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கும். முதல் கடிதம் குமுதத்தில் வந்த உடனேயே – அதாவது மே 25-ஆம் தேதியே தமிழக முதல்வர் தலைமைச் செயலாளரிடம் இந்தக் கடிதம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துவிட்டதாகத் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு ஐஏஎஸ் மூலமாக எனக்குத் தெரியவந்தது. இதை நான் குறிப்பிடலாமா என்று … Read more

இதுதான் வித்தியாசம்… அராத்து

அராத்து முகநூலில் எழுதியது: மக்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ அடிப்படையிலேயே ஆதி காலம் தொட்டு எழுத்தாளர்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். புலவர்களின் வறுமையில் இருந்து தொடங்குகிறது இந்த இழிவான வரலாறு. என்னை ஏண்டா நாகரீகமா ஆக்க முயற்சி பண்ற ? என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தடுப்பூசி போட வந்த மருத்துவக்குழுவை வட இந்திய கிராமம் ஒன்றில் உருட்டுக்கட்டையால் அடித்துத் துரத்தியதுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். இது எங்கே வந்து நிற்கிறது என்றால் இன்றைய இளைய தலைமுறை … Read more

விட்டு வந்த இடம் : அருண்மொழி நங்கை

வழக்கம் போல் என்னை அசத்திய எழுத்து. ஒரு பிரமாதமான வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார் அருண்மொழி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும். நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.

இன்னொரு கடிதம்

அன்புள்ள நண்பர் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு, தங்களை என் நண்பர் என்று கருதுவதால்தான் கீழ்க்கண்ட தங்களின் முகநூல் குறிப்புக்குப் பதில் எழுதுகிறேன்.  பாஜக ஆட்கள் என்றால் புறம் தள்ளி விட்டுப் போயிருப்பேன்.  இப்போது தங்கள் முகநூல் குறிப்பு: எழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கையை இப்போதுதான் படித்துமுடித்தேன். சிறப்பு. சிறப்பு. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி பல. உண்மையில் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள்தான். தனிப்பட்ட முறையில் … Read more

முதல்வருக்கு இரு கடிதங்கள்

பின்வரும் இரண்டு கடிதங்களும் முதல்வர் திரு. ஸ்டாலினுக்கு எழுதி குமுதத்தில் வெளிவந்தவை. நீண்ட கடிதம் என்பதால் இரண்டாகப் பிரிக்க நேர்ந்தது. அன்புக்கும்  மதிப்புக்கும் உரிய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தங்களை முதல்வராகப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.  சற்றே தாமதம் ஆனாலும் அது நடந்து விட்டது.  வாழ்த்துகள்.  அதே சமயம் ஒரு சவாலான சூழ்நிலையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள்.  அந்த சவாலை எதிர்கொள்ள அதிகாரிகள் முழுமூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். … Read more