நான்தான் ஔரங்கசீப்…லஃபீஸ் ஷஹீதின் குறிப்பு

பின்வரும் பதிவு முகநூலில் என் நண்பர் லஃபீஸ் ஷஹீத் எழுதியிருப்பது. நான்தான் ஔரங்கசீப்… இந்த மாதம் முப்பதாம் தேதியிலிருந்து bynge.in இல் தொடர்ந்து வெளிவரும். அதற்கு ஒரு தொடக்க அறிமுகமாக லஃபீஸ் ஷஹீதின் இந்தக் குறிப்பு பயன்படலாம். சூபி ஞானி ஷர்மத் ஷஹீத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முகலாயர் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் திகம்பரமாக திரிந்தவர். இவர் அவுரங்ஸீப் ஆலம்கீர் மற்றும் தாராஷிகோ இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் தாராஷிகோ பக்கம் இருந்ததால் அவுரங்ஸீப் இனால் தூக்கில் ஏற்றப்பட்டார். … Read more

ஒன்றரைக் கதவு

வாசிப்பது ஒரு தெரப்பி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.  அதேபோல் எழுதுவதுமே தெரப்பிதான் என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன்.  சுமார் இருபத்தைந்து நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல்.  மன உளைச்சல் என்றால் என்ன?  படுத்தால் தூக்கம் வராமல் எண்ணங்கள் புரட்டிப் போடுகிறதா?  அதுதான் மன உளைச்சல்.  இதோ பாருங்கள், நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டிய ஆள் மூணு மணிக்கே எழுந்து விட்டேன்.  இதுதான்.  ஆனால் இன்று இரவிலிருந்து நல்ல தூக்கம் வரும்.   இதை எழுதி … Read more

தற்காலச்* சிறுகதைகள்: அராத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு சில சிறுகதைகளைப் படித்தேன். அம்மா பாசம் , தாத்தா வின் தனிமை , பாட்டியின் காவியத் துயரம் , ஏழ்மை ,உழைப்பு , விவசாயத்தின் மேன்மை , ஆடு மாடுகளின் பாசம் என ஒரே ஒப்பாரி.மூக்குச்சளியால் சிறுகதையின் பக்கங்கள் நனைந்து எடை தாங்காமல் மடிந்து தொங்குகின்றன. கதை சொல்லல் முறையிலாவது ஏதேனும் புது முயற்சி செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் நஹி ! எந்த பரீட்சார்த்தமான முயற்சியும் இல்லாமல் , பேதி போவது போல … Read more

காலையில் வயலன்ஸ் வேண்டாம்…

இன்று மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். முதல் பதினைந்து நிமிடங்கள் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசி விட்டு பிறகு உரையாடல். தயை கூர்ந்து யாரும் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படி அருந்தியே தீருவேன் என்றால் ஒரு பெக்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒயினாக இருந்தால் ஒரு கிளாஸ் போதும். மீதியை ஒன்பது மணிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் நிதானமாகவே பேசினாலும் மற்றவர்கள் கண்டு பிடித்து … Read more