சிறுகதை நேரம்

ஆதியிலே சப்தம் இருந்தது.  நான் அந்த சப்தத்தின் அடிமை.  சிலர் நாத பிரம்மம் என்கிறார்கள்.  ஓம் என்ற ஒலி ஒரு குறியீடு.  இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியின் பாங்கு உலகின் தலைசிறந்த பாங்குகளில் ஒன்று எனப் படித்ததும் உடனடியாகக் கிளம்பி இஸ்தாம்பூல் சென்றேன்.  தஞ்சாவூர்க் காவிரி தன் மைந்தர்களுக்குக் கொடுத்த கொடையே காவிரியின் மைந்தர்கள் தம் வாழ்நாள் பூராவும் சப்தத்தின் அடிமையாகவும் சப்தத்தின் உபாசகராகவும் வாழுமாறு மாற்றுவதுதான்.  நாதத்தின் ஒரு வடிவமே கதையை வாசிக்கக் கேட்பது.  இன்றைய … Read more

சிறுகதை நேரம்: ஃபாத்திமா பாபு: மாயமான் வேட்டை

நேற்று இரவு ஒன்பது இருபதுக்கு க்ளப் ஹவுஸில் ஃபாத்திமா பாபுவின் சிறுகதை நேரம் தொடங்கியது.  ஒன்பது முப்பதுக்குக் கதையை வாசிக்க ஆரம்பித்தார்.  நேற்றைய கதை என்னுடைய மாயமான் வேட்டை.  பொதுவாக தமிழ்ச் சூழலில் கதையையோ கவிதையையோ வாசித்துக் கேட்பது எனக்கு ஆகாத காரியமாக உள்ளது.  காரணம், நான் அல்ல.  வாசிப்பவர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை.  அதிலும் அந்தத் துறையில் பிரபலமாக இருப்பவர்கள் வாசிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை.  கவிஞர்களின் கவிதை வாசிப்பும் கொடுமை.  ஆனால் ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற … Read more

அராத்துவின் புதிய பன்றி கவிதை

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினால் ஸ்ரீராமுக்கு ஒரே ஜாலிதான் போல. நெரூதாவின் நாய்க் கவிதையை எனக்கு அனுப்பினார். மணி மாலை 4.46. என் பொருட்டு எழுதியதாகத் தெரியவில்லை. உடனே அராத்துவுக்கு அனுப்பி இதற்குப் பன்றி கவிதை தேவை என்று எழுதினேன். 5.02க்கு அவர் பன்றி கவிதை அனுப்பினார். எனக்கு நகுலனும் சுந்தர ராமசாமியும்தான் ஞாபகம் வருகிறார்கள். இப்படி எழுதுவதற்கு எத்தனை நாய்க் கவிதை வரப் போகிறதோ, பயமாக இருக்கிறது. சும்மா கிடந்த சீனி நெரூதா புண்ணியத்தால் பெரும் கவியாகி … Read more

ஃபாத்திமா பாபு குரலில் மாயமான் வேட்டை- இன்று இரவு

https://m.facebook.com/story.php?story_fbid=4312954222087633&id=100001192933610&sfnsn=wiwspwah மேற்கண்ட சுட்டியின் மூலம் இன்று இரவு ஒன்பது இருபதுக்கு இணைந்தால் ஃபாத்திமா பாபுவின் குரலில் மாயமான் வேட்டை கதையைக் கேட்கலாம். நானும் கலந்து கொள்கிறேன்.