Collectors copy

நன்கொடையும் இலவசமும் குறிப்பின் தொடர்ச்சி இது. எக்ஸைல் முதல் வடிவம் பத்து பிரதிகளும் தீர்ந்து விட்டன. என் நூலகத்தின் இட நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு. இப்போது ஒரு அரிய நூல் கிடைத்தது. உங்களுக்குத் தெரியும், உயிர்மையில் என் புத்தகங்கள் வரும் வரை என் புத்தகங்களுக்கு நானேதான் பதிப்பாளன். அவ்வகையில் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொரு பதிப்பகப் பெயரில் வெளியிடுவேன். முதல் புத்தகமான ஜேஜே சில குறிப்புகள் – ஒரு விமர்சனம் என்ற நூலை சாரு பப்ளிகேஷன்ஸ் … Read more

நன்கொடையும் இலவசமும்…

2011இல் வெளிவந்த எக்ஸைல் நாவலின் முதல் வடிவம் பத்து பிரதிகள் என்னிடம் உள்ளன. தேவைப்படுவோர் எழுதவும். அனுப்பி வைக்கிறேன். அது இனிமேல் மறுபிரசுரம் ஆகாது. எனவே collectors’ copyதான். விலை இல்லை. நன்கொடைதான். எழுதுங்கள். மேற்கண்ட குறிப்பில் உள்ள நன்கொடை என்ற வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் விதத்தில் எழுதி விட்டேன். அதற்காக வருந்துகிறேன். நண்பர்கள் கோபப்பட வேண்டாம். நன்கொடை என்ற வார்த்தையைப் புத்தக உலகில் பலரும் கேள்விப்பட்டதில்லை என்பதையே எனக்கு வந்த எக்கச்சக்கமான கடிதங்கள் தெரிவிக்கின்றன. … Read more

மதுவும் புத்தகமும்

மேற்கண்ட தலைப்பில் ஒரு ப்ளாக். அதில் எழுதுபவர் மதுநிகா சுரேஷ். மதுவின் மங்கியதோர் நிலவினிலே மிக வித்தியாசமான நிலவியலைக் கொண்டு இயங்குகிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். மங்கியதொரு நிலவினிலே ….. – மதுவின் பக்கங்கள் (madhuvumputhagamum.blog)

பிடித்த பத்து பேர்

தனக்குப் பிடித்த பத்து பேர் என்று ஒரு பட்டியலைப் பல நண்பர்களும் முகநூலில் முகம் தெரியாத தோழிகளும் தோழர்களும் அடிக்கடி வெளியிடுவதைக் காண்பதுண்டு.  இதை ஆரம்பித்து வைத்தது க.நா.சு. என்று நினைக்கிறேன்.  வெகுஜன வெளியில் சுஜாதா.  சுஜாதாவின் பட்டியலில் எப்போதும் இடம் பிடித்தவர் ஒரு கவிஞர்.  இல்லை, நீங்கள் நினைப்பவர் இல்லை.  இவர் பெயர் “ப”வில் ஆரம்பிக்கும்.  அந்தப் பெயரை சுஜாதாவின் பட்டியலில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதாவின் fetishதான் இப்படி வேறொரு ரூபம் எடுத்து வெளிவருகிறது … Read more

என்னைச் சந்திக்க ப்ரூ ரூமுக்கு வருவாரா த்ரிஷா?

இந்தியாவிலேயே ரொம்பக் கட்டுப்பெட்டி சமூகம் தமிழ்நாடுதான்.  இன்று காலை ஃபாத்திமா பாபுவிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி.  தெரிந்த செய்திதான் என்றாலும் குஷ்வந்த் சிங் சம்பந்தப்பட்டது என்றால் திரும்பத் திரும்ப படிக்கலாம்.  குஷ்வந்த் இல்லஸ்ட்ரேடட வீக்லியின் ஆசிரியராக இருந்த காலம்.  அவருக்கு ஒரு போன் வருகிறது.  நான் நர்கீஸ் தத் பேசுகிறேன். எந்த நர்கீஸ் தத்?  சினிமா நடிகை? ஆமாம். யார்?  மதர் இண்டியா… ஆமாம்.  ஆமாம்.  எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும்.  வரலாமா? வாருங்கள். அரை மணி … Read more

சிறுகதை நேரம்: இன்றைய வாசிப்புக்கான லிங்க்

சற்று முன்னர் எழுதிய குறிப்பில் சில மாற்றங்கள். ஒலிச் சித்திரம் என்பது சினிமாவை வானொலியில் கொடுக்கும்போது சொல்லப்படும் வார்த்தை. நான் சொல்ல நினைத்தது வானொலி நாடகங்கள். ஒலிச் சித்திரம் அல்ல. இன்னொரு முக்கிய விஷயம். என்னை, குழந்தை மாதிரி என்று முதலில் சொன்னவரே ஃபாத்திமா பாபுதான். பாருங்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் மறந்து விடுகிறது. உமாவுக்கும் மீராவுக்கும் முன்பே சொல்லி விட்டார். இன்றைய கதை: கோடம்பாக்கம். லிங்க்: https://www.clubhouse.com/club/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE