தஸ்தயேவ்ஸ்கியைச் சூதாடி எனச் சொல்லுங்கள்…

என் வாசகர் வட்ட நண்பர்கள் வெறும் குடிகாரர்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள், சாருவின் அல்லக்கைகள் என்று பல நண்பர்கள் என்னிடமே சொல்லக் கேள்விப்படுகிறேன். என்னையே இத்தனை நாள் தமிழ்ச் சமூகம் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருந்தது? சமீபத்தில் கூட ஒரு சின்னப் பையன் அப்படித்தானே சொன்னான்? சின்னப் பையன்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தச் சின்னப் பையர் ஒரு மதிப்புக்குரிய சிறு பத்திரிகை/இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும், என் மதிப்புக்குரிய பல எழுத்தாள நண்பர்களுக்கு அந்தச் சின்னப் … Read more

இணையத் தொடர்பு

சுமார் இரண்டு வார காலமாக நான் இந்தப் பக்கம் வரவில்லை. ஒரு வாரம் வெளியூர் சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தனை நாட்களுக்கு நான் வெளியூர் சென்றது இதுவே முதல் முறை. இது போக ஏர்டெல் இண்டர்நெட் தொடர்பு ஒரு வாரமாக இல்லை. எவ்வளவோ புகார் செய்தும், ட்விட்டரில் திட்டியும் ஒரு பயனும் இல்லை. எல்லோரும் அரசு அலுவலகங்களைத் திட்டுவார்கள். விகடனில் ஒரு ஆயிரம் ஜோக்காவது படித்திருப்பேன். ஆனால் தனியார் நிறுவனங்கள் படு பயங்கரம். அரசு அலுவலகத்திலாவது … Read more

ஸ்மாஷன் தாரா: உன்மத்தத்தின் அழகியல்: அராத்து

சாரு நிவேதிதாவின் கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு அராத்து அளித்துள்ள முன்னுரை கீழே: காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே, வா. எமது உயிர் – நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் … Read more

சனல்லாஹ் இப்ரஹீம்

Sonallah Ibrahim எகிப்தின் மிக முக்கியமான எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கும் இவர் நாஸர் காலத்தில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். செய்த குற்றம், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததுதான். இப்போதும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி விரிவாக அ-காலம் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். அ-காலம் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் கிடைக்கும். இப்ரஹீம் பற்றிய கட்டுரையிலிருந்து: 2003-இல் இப்ரஹீம் எகிப்திய அரசின் உயரிய இலக்கிய விருதான அராபிய நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பொதுவாக கலகக்காரர் … Read more

புத்தக விழாவில் என் புதிய புத்தகங்கள்

கடந்த ஆறு மாதங்களாக நண்பர் ஸ்ரீராம் மருத்துவமனை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் போனில் பேசி விட்டு நள்ளிரவு வரை நான் இணைய தளத்தில் எழுதியவற்றை சப்ஜெக்ட்வாரியாகத் தொகுத்துக் கொண்டு இருக்கிறார். ஆறு மாதமாக இதேதான் வேலை. தூங்கி எழுந்து மறுநாள் மருத்துவமனை. நண்பர்களைச் சந்திப்பது இல்லை. சினிமா இல்லை. வேறு பொழுதுபோக்கு இல்லை. மாதம் ஒருமுறை மனைவியைப் பார்க்க ஊருக்குப் போய் வருவார். இப்படியாக பத்து புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தப் பத்தையும் இந்தப் புத்தக … Read more

ஸ்மாஷன் தாரா

2020 அக்டோபர் வாக்கில் – அதாவது சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு என் கவிதைகளைத் தொகுத்து என் சிநேகிதியிடம் கொடுத்தேன்.  Mediocre என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்.  அவர் ஒரு cynic என்று நான் நினைப்பதால் இன்னொரு சிநேகிதியிடம் கொடுத்தேன்.  இவர் அவரை விடக் கடுமையான cynic என்று தெரியும்.  இருந்தாலும் வேறு யாரிடம் கொடுப்பது என்றும் தெரியாததால் கொடுத்தேன்.  இவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார்.  ஆனால் நான் சளைத்து விடவில்லை.  உங்களுக்கு ஒக்தாவியோ … Read more