இரண்டாம் கடவுள்
பற்றை விடு விடுதலை பெறு ததாகதர் கண்ட ஞானம் தேன்சிட்டு சொன்னது ஒரு ஞானம் யாரும் யாரையும் முழுமை செய்ய முடியாது என் பங்குக்கு நானுமொரு ஞானம் சொன்னேன் என் ஆவியை வார்த்தையாக்கித் தருகிறேன் இலக்கியத் திருட்டு என்றது தேன் சிட்டு விவிலியத்தின் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம் அப்படியானால் நான் இரண்டாம் கடவுள் என்றேன்