தனியாக வாழ்தல்…

அவந்திகா ஒரு வாரம் மும்பை செல்கிறாள்.  இதுவரை அவள் எந்தப் பயணமும் செய்ததில்லை.  ஊருக்கும் போனதில்லை.  ஏதாவது ஆன்மீகக் கூட்டம் என்று போனாலும் மறுநாளே வந்து விடுவாள்.  இப்போதுதான் முதல் முறை.  அதனால் எனக்கு வீட்டில் தனியாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரியாது.  வாஷிங் மெஷின் போடுவதற்கு சொல்லிக் கொடு என்றேன்.  உனக்கு வராது, நீ கெடுத்து விடுவாய் என்றாள்.  இதுவரை மாப் போட்டதில்லை.  பணிப்பெண் கிடையாது.  பாத்திரம் தேய்ப்பது சுலபம்.  தினந்தோறுமே 75 சதவிகிதம் நான் … Read more

பாரிஸும் சீலேயும்…

ஆவணப்படத்துக்கான நிதி திரட்டல் தொடர்பாக இன்னும் ஒரு விஷயம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ராம் என் துருக்கி பயணத்துக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார்.  அதனால்தான் நிலவு தேயாத தேசம் என்ற என் பயணக் கட்டுரை நூல் கிடைத்தது.  அது போல, இப்போதைய சீலே பயணத்துக்கு நீங்கள் பணம் தர முடியாது போனால் சீலேவுக்கான என் டிக்கட் செலவை ஏற்கலாம்.  நானும் இயக்குனரும் செல்வோம்.  சாத்தியம்தான்.  தமிழில் உள்ள எல்லா பதிப்பகங்களும் என் புத்தகத்தை வெளியிட … Read more

லும்ப்பன் மாஸ்டர்பீஸ்

இடைவேளை வரை எதுவுமே புரியவில்லை.  ஆள் ஆளுக்கு வருகிறார்கள்.  துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்.  ஏதேதோ பேசுகிறார்கள்.   ஒரே ஆள் – பார்க்க நன்றாக இருக்கிறார் – எல்லோரையும் அடித்துத் துவம்சம் செய்கிறார்.  அவர்தான் ஹீரோவாம்.  ஆனால் அஞ்சே நிமிடத்தில் இடைவேளை வந்து விட்டது போல் இருந்ததுதான் அதிசயம்.  இந்த அதிசயம் தமிழ்ப் படத்தில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நடக்கவே இல்லை.  பாட்சாவில்தான் நடந்தது.  இப்போதெல்லாம் ரெண்டு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி கொடூரமான அறுவைகளாக உழுது … Read more

ஆவணப்படம் குறித்து…

என் மீது அக்கறையும் அன்பும் கொண்ட நண்பர் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உங்களைப் பற்றிய ஆவணப்படத்துக்கு நீங்களே காசு கேட்பது சரியில்லை, கண்டவர்களும் உங்களைக் கேலி பேசுவார்கள், நாங்கள் கேட்கிறோம், நானோ சீனியோ கேட்கிறோம் என்று பத்துப் பதினைந்து வாட்ஸப் மெஸேஜ்கள் அனுப்பினார். சமூகத்தில் காசு கேட்பதே அசிங்கமாகத்தான் கருதப்படுகிறது. என் படத்துக்கு நானே காசு கேட்பது அசிங்கம்தான். ஆனால் இதில் உள்ள அசிங்கத்தைப் பார்த்தால் காரியம் நடக்காது. எனக்குக் காரியம்தான் முக்கியம். சமூகம் என்ன நினைக்கிறது … Read more

சுய வரலாற்று ஆவணப்படம்

மேற்கு நாடுகளின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தொண்ணூறு வயதைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.  நிகோனார் பார்ரா 104 வயது வரை வாழ்ந்தார்.  வாழ்வது மட்டுமல்ல, அத்தனை வயது வரை மதுவும் சுருட்டுமாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.  இந்தியாவில் அப்படி இல்லை.  சென்ற வாரம் ஒரு வங்காள எழுத்தாளரை சந்திக்க நினைத்து கொல்கத்தா செல்லலாம் எனத் திட்டமிட்டேன்.  அவர் எழுத்து அச்சு அசலாக என் எழுத்தைப் போலவே இருந்ததால் அவரைச் சந்திக்க ஆர்வம் கொண்டேன்.  அவரது மொழிபெயர்ப்பாளரைக் கேட்டபோது அவர் … Read more