சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை, ஏன்?

என் எழுத்து பற்றியும், என் எழுத்தை எதிர் கொண்ட தமிழ்ச் சமூகம் பற்றியும் ஒரு சிறப்பான ஆய்வு. த. ராஜன் ஆரம்பித்து வைத்த விவாதத்தை மனுஷ்ய புத்திரன் முடித்து வைக்கிறார். முக்கியமான புத்தகம். வாங்கிப் படியுங்கள். ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிய புத்தகம். சாருவால் பெருமாள் முருகனாக முடியவில்லை (razorpay.com)

மாயம்

அடிக்கடி நண்பர்கள் நீங்கள் பயன்படுத்தும் முகக் களிம்பு என்ன பிராண்ட் என்று கேட்கிறார்கள். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம். தங்கமான சப்ஜெக்ட். எம்ஜியார் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது உண்மைதான். நானும் ஒரு பத்து வருட காலம் தங்க பஸ்பம் சாப்பிட்டேன். விவரம் மற்றும் பலன் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். உறவு துண்டானதும் பஸ்பத்தை நிறுத்தி விட்டேன். தேவைப்படவில்லை. இவ்வளவுதான் வெளிப்படையாக சொல்ல முடியும். ஆயுர்வேதத்தில் எல்லாம் இருக்கிறது. அதேபோல் தங்கத்தைப் பொடி … Read more

உண்மையான காதல்

ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ள நாவல். அராத்து எழுதியது. ரேமண்ட் கார்வரின் ஒரு குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. எனக்கு ரெமண்ட் கார்வரின் கதைகள் – இதுவரை நான் படித்தவற்றில் இருந்து பார்த்த போது – குப்பைக் கூளம். இத்தனை குப்பையான கதைகளை எழுதிய ஒருவரை என்னால் ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள முடியாது, அவர் இதை விட நல்ல கதைகள் எழுதியிருந்தாலும். அராத்துவின் கதையும் எனக்குப் பிடிக்கவில்லை. முதல் முதலாக அப்படி நடந்திருக்கிறது. ஆனால் ஆச்சரியமான … Read more

கலையும் மீறலும்: உரையாடல்: அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் எட்டாம் தேதி ஞாயிறு காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை வாசகர்களுடன் உரையாடுகிறேன். எல்லோரும் திரளாக வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர். இங்கே பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபந்நியாசம் நிகழ்ந்த போது இரண்டு வார காலம் தினமும் காலை ஏழு மணிக்கு நூறு பேர் வந்தார்கள். இலக்கியத்தில் அல்ல, ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆண்டாளிடம் பக்தி கொண்டவர்கள். அப்படி ஒரு நூறு பேராவது வந்தால் மகிழ்ச்சி … Read more

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு / அருஞ்சொல்

சமஸ் எனக்குப் பிடித்த பத்திரிகையாளர். என்னை ஒரு இருபது பேர் இதுவரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் மிகச் சிறந்த பேட்டி ஆங்கில நாவலாசிரியையும் நாட்டியக் கலைஞருமான Tishani Doshi எடுத்தது. Author’s parole என்ற தலைப்பில் அது வெளியாகி இருக்கிறது. அதே பெயரை கூகிளில் போட்டால் அந்தப் பேட்டியை நீங்கள் படிக்கலாம். அதை விட நல்ல பேட்டியாக இதை உருவாக்கியவர் சமஸ். நான் கொஞ்சம் கண்ணாடி மாதிரி. நீங்கள் உளறினால் நானும் உளறுவேன். நீங்கள் நன்றாகப் பேசினால் … Read more

தேவை ஒரு அய்யங்கார் நண்பர்

ராகவன் வினித்திடம் எக்கச்சக்கமாகப் பேசியிருக்கிறார். பேசக் கூடாததையெல்லாம் பேசியிருக்கிறார். அதில் ஒன்று, அராத்து என்னையும் சாருவையும் பிரிக்கப் பார்க்கிறான். எனக்கு அவர் சொன்னதில் பிரச்சினை இல்லை. ன் விகுதிதான் பெரும் மண்டைக் குடைச்சலாக இருக்கிறது, இன்னும். நானேதான் ஆயிடுக என்பது வெறும் வார்த்தை இல்லை ஸ்வாமி. நெஞ்சில் உணர வேண்டும். எலும்பு மஜ்ஜைக்குள் போக வேண்டும். பிரிக்கப் பார்க்கிறான் என்றால் நீங்கள் அவ்வளவு பெரிய ஆள், இல்லையா? அப்படித்தானே அர்த்தம்? தமிழிலேயே அறுபது ஆண்டுகளாகப் புழங்குகிறேன். வேறு … Read more