Uncategorized
நீங்கள் வேறு, நாங்கள் வேறு, ஆனாலும் சமரசமாய் வாழ்வோம்…
இந்தத் தலைப்பில் அல் குர்-ஆனில் ஒரு வசனம் உண்டு. ஔரங்ஸேப் நாவலில் அதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் ராம்குமார் அருண் இன்று பின்வருமாறு எழுதியிருக்கிறார். விஷயம் விஷ்ணுபுரம் விழா பற்றியது. ”இந்த ஆண்டு சாரு நிவேதிதாவோ அவருடன் வந்தவர்களோ ஒரு அரங்கிலேகூட உட்கார்ந்து கவனிக்கவில்லை. அவர்கள் சாரு சந்திப்புக்கும் விழாவுக்கும் மட்டும்தான் வந்தார்கள்.” சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தெளிவு படுத்தியும் இருக்கிறேன். ஆனால் ராம்குமார் அருண் என் ப்ளாகைப் படிப்பதில்லை என்று … Read more
அன்பு குறித்து ஒரு புகார் மனு
அன்பு குறித்து ஒரு புகார் மனு இதுதான் நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு. நேற்று மனுஷிடமும் நேசமித்ரனிடமும் அராத்துவிடமும் பேசினேன். இதே வார்த்தைகளை வைத்து வெவ்வேறு விதமாக யோசித்தோம். கடைசியில் இந்தத் தலைப்பை முடிவு செய்தேன். முடியும் தறுவாயில் (பல எழுத்தாளர்கள் தருவாயில் என்று போடுகிறார்கள்!) இருக்கிறது. இன்றோ நாளையோ முடித்து விடுவேன். புத்தகத்தில் 200 பக்கம் வரும். ஔரங்ஸேப் மாதிரி இல்லாமல் முழுக்க முழுக்க ஆட்டோஃபிக்ஷன். இனிமேல் ஆட்டோஃபிக்ஷன் எழுத சரக்கு இல்லை … Read more
மனுஷ்ய புத்திரன் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
வைரமுத்துவையும் வைத்துக் கொண்டு சிறப்புரை சாரு நிவேதிதா என்று போட ஹமீதுக்கு எத்தனை தைரியமும் என் மீது நம்பிக்கையும் இருக்க வேண்டும்? வைரமுத்துவிடம் தமிழ் விளையாடும். எனக்குப் பேச வராது. ஆனால் ஒன்று உறுதி. என் மனதிலிருந்து பேசுவேன். வந்து விடுங்கள்.
ஏழாம் தேதி புத்தக வெளியீடு
வரும் ஏழாம் தேதி நந்தனம் புத்தக விழாவில் உள்ள பிரதான அரங்கத்தில் மனுஷ்ய புத்திரனின் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் வெளியாகின்றன. அதில் மனுஷின் கவிதைகள் பற்றிப் பேசுகிறேன். ஏற்கனவே அவருடைய கவிதைகள் பற்றி நான் பேசிய மிக முக்கியமான உரை காணாமல் போய் விட்டது. பதிவு செய்த பேச்சு யாரிடமும் இல்லை. இந்த முறை அப்படி நடக்காமல் கபிலன் அதைப் பதிவு செய்து விடுவார் என நம்புகிறேன். ஆனால் இந்த முறை இரண்டு நட்சத்திரப் … Read more
கர்னாடக முரசும்…
கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற இந்தப் புத்தகம் உங்களிடம் இல்லையெனில் – என்னைக் கோபித்துக் கொள்ளாதீர்கள் – உங்களை என் நண்பராக நான் எண்ண மாட்டேன். இந்தப் புத்தகத்தைத் தட்டச்சு செய்து தருவதற்கு யாரும் கிடைக்காததால் என் நண்பர் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தட்டச்சு செய்ததாகச் சொன்னார். இந்தப் புத்தகம் அளவுக்குத் தமிழில் அலைகளைக் கிளப்பிய புத்தகம் வெகு சில தான் இருக்க முடியும். ஜே.ஜே. … Read more