புத்தக விழா

இன்றிலிருந்து தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் (எஃப் 19) இருப்பேன். சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை தினங்களில் நான்கு மணியிலிருந்து எட்டரை வரை இருப்பேன். நண்பர்கள் சந்திக்கலாம். ஒரு சின்ன வேண்டுகோள். நான் உங்கள் நூல்களில் கையெழுத்துப் போடும் போது நீங்கள் குனிந்து நிற்க வேண்டாம். அது ஏதோ மாதிரி என்னைத் தொந்தரவு செய்கிறது. பக்கத்து நாற்காலிகளில் அமருங்கள். அல்லது, நிமிர்ந்தே நில்லுங்கள். நான் கையெழுத்துப் போடுவதை … Read more

நண்பர்கள் கவனத்துக்கு…

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு நாவலை முடித்து விட்டேன். இனிமேல் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை. 35000 வார்த்தைகள். 350 பக்கங்கள் இருக்கலாம். எனக்கு அந்தக் கணக்கு தெரியாது. பணம் அனுப்பியவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும். உடன் பிடிஎஃப் அனுப்பி வைக்கிறேன். மேலும், பிடிஎஃப் பிரதி தேவைப்படுபவர்கள் பணம் அனுப்பவும். விவரம் நேற்றைய பதிவில் உள்ளது.

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற … Read more

கொல்லிமலைச் சித்தரும் என் புதிய நாவலும்

இந்தத் தலைப்பு சற்று ’லோடட்’ ஆக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். என் தலைப்புகள் எல்லாமே சட்டென்று மனதில் போய் ஒட்டிக் கொள்பவை. ஸீரோ டிகிரி. காமரூப கதைகள். ராஸ லீலா. இப்படி. ஆனால் மேலே உள்ள தலைப்பை நானே அடிக்கடி மறந்து விடுகிறேன். ஆனால் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை என்றும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்றும் தலைப்பு வைத்திருக்கிறேனே? மட்டுமல்லாமல் எனக்குப் … Read more