நட்சத்திர எண்கணிதம்
மோகினிக்குட்டியின் மென் புன்னகையில்எண்களை நெய்துஅவள் பிறந்தநாளைக் கண்டெடுத்தேன். சொற்களைக் கோத்துஅவள் பாதம் பூஜித்தேன். நிலவொளியில் ஓய்ந்த குளத்தின் அமைதியாய்மௌனித்திருந்தாள்.மௌனத்தின் ரகசியம் கேட்டேன். ‘இதுவரை யாரும் வாழ்த்தியதில்லை’என்றாள் ‘நான் விண்மீனாய் மாறினாலும்,ஒளியின் ரூபமாய்உன் பிறந்தநாளில் வாழ்த்துவேன்’என்றேன்.