Conversations with Aurangzeb

Conversations with Aurangzeb நாவல் சென்னை, பெங்களூர், மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பிரதான புத்தகக் கடைகளில் முன்னணி விற்பனையில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதுவரை வாங்காதவர்கள் க்ராஸ்வேர்ட் போன்ற கடைகளில் நாவலை வாங்கிக் கொள்ளலாம். சில புகைப்படங்கள் கீழே:

பெட்டியோ: முதல் மதிப்புரை

பெட்டியோ நாவலுக்கான முதல் மதிப்புரை அந்த நாவலை யாருக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கிறேனோ அவரிடமிருந்தே வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சித்த மருத்துவரும் என் நண்பருமாகிய பாஸ்கரன் பெட்டியோவுக்கு ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறார். எந்நேரமும் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மருத்துவத் தொண்டு செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இத்தனை பெரிய நாவலைப் படிக்க எங்கே நேரம் இருக்கும், ஒரு வருடத்தில் படியுங்கள் என்றே சொல்லியிருந்தேன். அவரோ ஓரிரு தினங்களிலேயே படித்து மதிப்புரையும் எழுதி விட்டார். அவந்திகா … Read more

பெட்டியோ நாவலை என்.எஃப்.டி.யில் எளிதாக வாங்குவது எப்படி? வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவது எப்படி?

பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதியை வாங்கிய அன்பர் தன் பெயரைக் குறிப்பிடாமல் ஏதோ எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு முந்நூறு பக்க நூலை வாங்குவதால் ஏற்படக் கூடிய குடும்ப வன்முறையிலிருந்து தப்புவதற்கு இதை விட எளிதான வழி உண்டா என்ன? நீங்களும் இந்த வழிமுறையையே பின்பற்றலாம். பல வீடுகளில் ஐநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாலே டிவோர்ஸ் வரை போகிறது என்று ஆண்களும் பெண்களும் புகார் சொல்கிறார்கள். குடிப்பதைக் கூட அனுமதிக்கிறாள், … Read more

பெட்டியோ இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு விற்பனை!

தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு சாதனைதான். பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. வாங்கியவர் பெயர் தரவில்லை. நியாயம்தான். குடும்பத்தில் குழப்பம் ஆகி விடக் கூடாது. மிக நிச்சயமாக அவர் வாங்கிய இந்தப் பிரதி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். பத்தாயிரத்துக்கு வாங்கப்படும் பிரதிகள் இன்னும் ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டும். எனவே இப்போது நீங்கள் பெட்டியோவை வாங்குவதற்காக செலவிடும் … Read more

இலங்கைப் பயணம் – 3

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஊர் ஊராக சிறு பத்திரிகை நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கி, அங்கிருந்து காசு வாங்கிக் கொண்டு இன்னொரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தேன்.  தனியாகப் போவதில்லை.  கூடவே ஓரிரு சிறுபத்திரிகை நண்பர்களும் இருப்பார்கள்.  அதிகம் காசு கிடைத்தால் குடிப்போம்.  அப்படி ஒருமுறை தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்குக் கூட விக்ரமாதித்யனுடன் சென்றிருக்கிறேன்.  அப்போது அஜிதன் நாலு வயதுப் பையன்.  ஜெயமோகன் வீட்டுக்கு எதிர் வீடு பிரம்மராஜன் வீடு.  பிரம்மராஜனும் ஜெயமோகனும் பேசிக் கொள்வதில்லை.  நாங்களும் … Read more

பெட்டியோ விற்பனை

பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டது. வாங்கிய நண்பர் என்னைத் தொடர்பு கொண்டால் நாவலின் இரண்டாம் இலக்கம் உள்ள பிரதியை அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும். பெட்டியோவின் பதினெட்டாம் இலக்கப் பிரதியும் விற்று விட்டது. பத்தாயிரம் ரூபாய். பெட்டியோவை வாங்க நினைத்திருக்கும் நண்பர்கள் விரைவில் வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பிறகு குறிப்பிட்ட இலக்கங்கள் கிடைக்காது. charu.nivedita.india@gmail.com