புத்தக விழா குறிப்புகள் – 1

நாளை (3.1.2024) புத்தக விழா தொடங்குகிறது.  நான் நான்காம் தேதியிலிருந்து பதினோராம் தேதி வரை தினமும் மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேன்.  அரங்கு மூடும் வரை இருப்பேன்.  ஆகவே, நான்காம் தேதி மாலை ஸீரோ டிகிரி அரங்கில் சந்திப்போம்.  பெட்டியோ நாவலும், அந்நியனுடன் ஓர் உரையாடல் நேர்காணலும் வெளிவருகிறது.  இரண்டுமே முக்கியமான நூல்கள்.  வாருங்கள். ஸீரோ டிகிரி அரங்கு எண்: 598 C

தேவதேவன் விழா

பெங்களூரில் ஐந்து தினங்கள் இருந்தேன்.  வழக்கத்தை விட அதிக கொண்டாட்டம்.  ஆனால் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி படு தோல்வி.  ஒருவர்கூட கையெழுத்து வாங்கவில்லை.  ப்ளாஸம்ஸ், ஆட்டா கலாட்டா, புக்வாம் ஆகிய மூன்று கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன்.  என்னை சந்திக்க கரூரிலிருந்தும் ஹொசூரிலிருந்தும் கோவையிலிருந்தும் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்தார்களே ஒழிய மேற்படி புத்தகக்கடைகளில் யாருமே கையெழுத்து வாங்கவில்லை.  அதில் ஆச்சரியமும் இல்லை.  காரணம், நான் என்ன பெருமாள் முருகனா?  சல்மான் ருஷ்டியா?  அல்லது, லோக்கல் … Read more

உல்லாசம், உல்லாசம்… முன்பதிவுத் திட்டம்

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  2022 இறுதியில் ”அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” என்ற நாவலை அளித்தேன்.  2023இல் பெட்டியோ.  இந்த 2024இல் உல்லாசம், உல்லாசம்… வரும்.  அதற்கு இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகலாம்.  காரணம்: அதைப் படித்த வாசகர் வட்டத்தின் சில முக்கியமான நண்பர்கள் அந்த நாவலை இன்னும் செழுமைப்படுத்துவதற்கான கதைக்கரு அதில் இருக்கிறது என்றார்கள்.  கூடவே, சீனி இன்னொரு ஆலோசனையும் வழங்கினார்.  உல்லாசம் நாவலிலேயே ஜப்பான் கதைகளும் வருகின்றன,  அதனால் ரொப்பங்கி இரவுகளையும் … Read more

கேரள இலக்கிய விழா

நாளை மதியத்துக்குள் உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கான முன்பதிவுத் திட்டம் பற்றிய விவரங்கள் குறித்த கட்டுரை வெளியாகும். *** கோழிக்கோடு நகரில் ஜனவரி 11இலிருந்து 14 வரை நடக்க உள்ள கேரள இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். அதில் பதின்மூன்றாம் தேதி காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை Conversations with Aurangzeb: A Novel குறித்த உரையாடல் எனக்கும் ஷியாஸ் முஹம்மதுவுக்கும் நடக்க உள்ளது. பின்வருவது ஷியாஸ் முஹம்மது பற்றிய குறிப்பு: Shiyas Mohammed is an … Read more

பெட்டியோ நாவல் முன்பதிவு

பெட்டியோ நாவலின் முன்பதிவு பற்றிக் குறிப்பிட்டு அதை முன்பதிவு செய்ய வேண்டியதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தேன். எண்ணி ஐம்பது பேர் மட்டுமே முன்பதிவு செய்திருக்கிறார்கள். சமூக அவலம். ஃபேஸ்புக், ட்விட்டர், என் ப்ளாக் மூன்றிலும் தகவல் கொடுத்திருந்தேன். இருந்தும் ஐம்பதுதான். முன்பதிவு செய்பவர்களுக்கான இணைப்பு: பெட்டியோ அச்சுநூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 500-க்கு வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://tinyurl.com/Pettiyo ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடர்பு எண்: 8925061999

Meet & Greet

ஆங்கில நூலான Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தில் நாளை (29 டிசம்பர்) கையெழுத்திடுகிறேன். இடம் பெங்களூரு. நிகழ்ச்சி நிரல்: வாருங்கள் என அழைக்கிறேன்.