கோடம்பாக்கம்
விரைவில் வெளிவர இருக்கும் சினிமா பற்றிய எனது நூலின் முகப்பு அட்டை.
விரைவில் வெளிவர இருக்கும் சினிமா பற்றிய எனது நூலின் முகப்பு அட்டை.
இன்று ராஸலீலா பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு ஜோடிப்புறா எத்தனை பிரதிகள் விற்றன என்று கேட்டேன். 33 என்ற பதில் வந்தது. என் வாட்ஸப் தொடர்பில் சுமார் நானூறு பேர் உள்ளனர். அவர்களில் ஒரு நூறு பேர் வாங்கினால் கூட போதும், பதிப்பகத்திலிருந்து என்னுடைய மற்ற நூல்களைப் பிரசுரித்து விடலாம். இப்படி பத்தும் இருபதும் விற்றால் எப்படி எழுதுவது? எதற்காக எழுதுவது? ஒரு யோசனை சொல்கிறேன். எனக்கு சில நண்பர்கள் பணம் அனுப்புகிறார்கள். சில தினங்கள் முன்பு கூட … Read more
பித்தனைப் போல் நானும் நெருப்புத் தேரில்தான் பயணிக்கிறேன் ஐம்பது ஆண்டுகளாக என் விரல்களிலிருந்து சுடர்விட்ட எழுத்துக்களைப் பற்றியபடி அதன் சக்கரங்கள் சுழல்கின்றன. மதியத்துக்குள் ஒரு முக்கியக் கட்டுரை அச்சுக்குப் போக வேண்டும் அப்போது தந்தை இறந்த செய்தி வந்தது. நான் போகவில்லை. தம்பியிடம் சடங்குகளை ஒப்படைத்துவிட்டு நான் தொடர்ந்து எழுதினேன். வார்த்தைகள் என்னை எரித்தன நான் அவற்றை எரித்தேன். கட்டுரையை அனுப்பிய பின் எடிட்டர் கேட்டார், “நீ மனிதனா?” நான் சொன்னேன்: “இல்லை. நானொரு நெருப்புத் தேர்.” … Read more
சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் ஸீரோ டிகிரி பார்ட்னர் காயத்ரி “சாரு நிவேதிதாவுக்கும் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று எழுதியிருந்தார். அந்த வாக்கியமே ராஸ லீலா பதிப்பகம் தொடங்கக் காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் எத்தனையோ பதிப்பகங்கள் உள்ளன. ஆனால் முளைத்த ரெண்டே நாளில் தமிழ்நாடு முழுவதும், சில தினங்களில் இந்திய அளவிலும் பிரபலம் ஆன பதிப்பகம் ஸீரோ டிகிரி பதிப்பகம். காரணம் யார் என்பதை ஊரே அறியும். அந்தப் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகத்துக்கே … Read more
9. மரணமிலாப் பெருவாழ்வு என் பெயர் குறிப்பிடாமல் என்னை அவதூறு செய்யும் ஒரு ஃபேஸ்புக் குறிப்பைக் கண்டேன். அதில் ஒரு வாக்கியம் வருகிறது. “நிஜமான கலை என்பது அடுத்தவர் கண்ணியத்தை சிதைப்பதல்ல, மாறாக, நம்முள்ளே இருக்கும் சிறுமைகளைச் சிதைப்பதாகும்.” பெல்ஜியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லியோபோல்ட் II (King Leopold II of Belgium).என்று ஒரு மன்னன் இருந்தான். இவன், “மனிதாபிமானம், நாகரீகம், கண்ணியம்” என்ற பெயரில் ஆஃப்ரிக்காவில் காங்கோ நாட்டை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக்கினான். உலக … Read more
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் கிழக்கு பதிப்பகத்திலிருந்து நான் எழுதிய எக்ஸைல் நாவல் வெளிவந்தது. அப்போது ஓர் அதிசயம் நடந்தது. முன்பதிவு செய்வதற்கு விளம்பரம் வந்ததும் ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஒரு மாதம். எனக்கு இப்போதும் அது கனவு போலவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது. அடுத்த மாதம் புத்தக விழா. அதற்குத் தேவையான பிரதிகளை மறுபடியும்தான் அச்சிட்டார்கள். மொத்தமே இரண்டாயிரம் பிரதிகள்தான் விற்றன. ஆனால் முதல் பதிப்பு ஒரே மாதத்தில் ஆயிரம் பிரதிகள். அதிசயம் … Read more