The Existential Weight of Spoons – 3

(ஒரு அறிவிப்பு: இனிமேல் இந்த நாவலின் அத்தியாயங்கள் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். என் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு. இந்த நேரத்தில் எனக்கு நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல நேரம் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நாவலுக்கான சன்மானத்தை அனுப்பி வையுங்கள். தளத்தில் படிக்கத் தவறிவிட்டால் எனக்கு எழுதிக் கேளுங்கள். அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com ) டாய்லட், பூனை, செடி என்று எதிலும் வேலை ஆகாத்தால் நாராயணன் நான்காவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்தான்.  பால்கனி.  … Read more

The Existential Weight of Spoons – 2

(முன்குறிப்பு: இந்தக் கதையில் பலதரப்பட்ட சம்பவங்களும் கருக்களும் கலந்து கட்டி வரும் என்பதாலும் வீடு என்ற தலைப்பு தட்டையாக இருப்பதாலும் வீடு என்ற தலைப்பை மாற்றி விட்டேன்.) உண்மையில் பூனைக்கு உணவிடுவதில் மட்டும் சூரிய நாராயணன் பிரச்சினை பண்ணவில்லை.  நீங்கள் யோசிக்க வேண்டும்.  மனைவி பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அம்மா பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அப்பாவும் பைத்தியம் பிடித்துச் செத்தார்.  மனைவியும் அப்பாவும் செத்தது பெருமாளும் வைதேகியும் அங்கே குடி போவதற்கு முன்னால்.  ஆனால் அவன் அம்மா … Read more

நான் என்ன செய்ய வேண்டும்?

இன்று இரண்டரை மணி அளவில் சீனி அழைத்தார்.  காலையிலேயே அவர் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார்.  என் சக எழுத்தாளர் பேசிய முக்கால் மணி நேரப் பேச்சு.  தத்துவம் சார்ந்த்து.  ”அதற்கு நீங்களும் நானும் பதில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றார்.  உங்களுக்குத்தான் தெரியுமே, யார் எதைச் சொன்னாலும் எனக்கு அது சரியாகவே தோன்றும், அதிலும் சீனி சொன்னால் கேள்வியே இல்லை.  சரி, எழுதி விடுவோம் என்றேன்.  அவருடன் பேசிய போது குளித்து விட்டு வந்து ஈரத்துண்டைக் … Read more

The Existential Weight of Teaspoons – 1

அத்தியாயம் ஒன்று ஏழு ஆண்டுகளாக இருந்த வீட்டை ஏன் மாற்றினீர்கள் என்று பல நண்பர்கள் பெருமாளைக் கேட்டார்கள்.  ஏழு ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக மைலாப்பூரில் வசித்த தனி வீட்டையே மாற்றிக்கொண்டு வரவில்லையா? என்ன அற்புதமான வீடு!  மைலாப்பூரில் ஒரு தனி வீடு.  சுற்றி வர மரங்கள்.  தோப்புக்குள் இருப்பது போல் இருக்கும்.  பத்துப் பன்னிரண்டு மரங்கள்.  அது போதாதென்று பெருமாள் கடம்ப மரம் வேறு வைத்தான்.  அது வேறு ஆலமரம் போல் பெருகி … Read more

மீண்டும் ஜப்பான்… (1)

ரொப்பங்கி இரவுகள் நாவலுக்காக இன்னும் சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதற்காக அக்டோபர் 11 அன்று ஜப்பான் செல்கிறேன். ஜப்பானில் உள்ள நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். சில நிபந்தனைகள் மற்றும் சில விஷயங்கள்: 1.வாழை படம் பற்றிப் பேசக் கூடாது. 2. வீட்டுக்கு அழைக்கக் கூடாது. அழைத்தால் என் பூனைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். வீட்டில் பத்து பூனைகள். சாந்தோமில் பன்னிரண்டு பூனைகள். அந்தப் பூனைகளை அப்படியே அம்போ என்று … Read more