அற்றது பற்றெனில் உற்றது வீடு

காமாந்த காரமெனுங் கள்ளுண்டு கண்மூடி
கண்டேன்நின் திருப்பாதம் கண்டேன்
கண்டறியாதன கண்டேன்
தபோதனரே
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
குமுத அமுத இதழ் பருகி உருகி மையல் கொண்டு
கலவியிலே தோய்ந்து சிவந்தது மாமனார் விழிகள்

டேய் சுன்னி மானார் விழிகள்டா
சரிங்க எஜமான்

மதியால வித்தகி மனதால உத்தமி
சொன்னா
’ஆமான்டா ஊம்புனேன் அதுக்கு
என்னடா இப்போ
புண்ட’

நானாவித மாயைகளின் அசிங்கமான மூட்டை நான்
என்னை என் பிழைகளோடு ஏற்றுக்கொள் சென்னமல்லிகார்ஜுனா

ஏய் குட்டி வர்ற சனிக்கெழம
ஒரு மீட்டிங்ல சினிமா ரசனைங்கிற
தலைப்புல பேசுறேன்
காலேல பத்து மணிக்கு மீட்டிங்
அதுனால மத்யானம் வரைக்கும்
ஒங்கிட்ட பேச முடியாது

பேசாத

ஏய் இங்க பார்றீ
காதல் சிறந்துநின் சேவடி சேர்ந்தேன்னு
எங்க க்ரான்மாவே சொல்லிருக்கா
சரியா
ஒன்னையே நினைந்திருந்தேன் ஒன்னையே துணிந்தொழிந்தேன்
ஒன்னையே உள்ளத்தின் உள்ளடைத்தேன்
ஒன்னை மட்டுமே ஓத்தேன்னு
ஏகபத்தினி விரதனா
கெடக்கேன்
அதுனால மோகினிக்குட்டீ
சத்தியமாச் சொல்றேன்
ஒன்னோட பேசலேன்னா
பைத்தியம் பிடிச்சிடுது
ஒங்கிட்ட பேஸ்றதுதான் பிராணன்
இல்லேன்னா பிரேதம்
நின்றேன் இருந்தேன் கிடந்தேன் திரிந்தேனென்
மோகினிக்குட்டீ

ஐயோ ஐயோ என் மண்டேல ஏன்டா இப்டி
சொமய ஏத்றீங்க
ஏங்கிட்ட பேசலன்னா என்னா ஒனக்கு
எவ்ளோ வேல கெடக்கு அதப் பாரென்டா
அன்னிக்கு அப்டித்தான் நான் யூரின் போறதுக்கு
பாத்ரூம் போறேன் எம் புருசன் சீக்கிரம் வந்துர்றீங்றான்
ஏன்டா ஒனக்கும் போவ்ணுமான்னேன்
இல்லடி நீ பாத்ரூம் போற நேரத்லகூட ஒன்னப் பிரிஞ்சிருக்க
முடிலடீங்கிறான்
பாடு
பொறம்போக்கு
தேவ்டியாப் பய
ஒழுங்கா ஓக்றதுக்கு வக்கில்லாத
பயலுவொ
பேச்சுலவொண்ணும்
கொறச்சலில்ல
அந்த அந்தோனியும் இப்டித்தான் சொல்லி
எல்லாப் புள்ளவொளயும்
கவுத்திருக்கான்னு
மீட்டூ பொண்ணுங்களோட அறிக்ய சொல்து
ஏம் புருசனும் அதயே சொல்றான்
இப்போ நீயும் சொல்ற
ஏன்டா இப்டி எல்லாப் பயலுவளும் ஒரே மாதிரி இருக்றீங்க
கொஞ்சம் அப்டி இப்டி மாத்தியிருக்கக் கூடாதா

பெண்கள்ளாம் கோச்சுக்கக் கூடாது
ஒருத்தன் ஒரு விலைமாதுட்ட போனான்
பட்டையா நாமமான்னு கேட்டா அவ
இவனுக்குப் புரீல
பட்டேனா படுத்துக்கிட்டு பண்றது
நாமோன்னா நின்னுக்கிட்டு பண்றது
பட்டேன்னா பத்து ரூவா
நாமோன்னா அஞ்சு ரூவா
ஹேஹ்ஹேஹ்ஹே

சைவத்துக்கும் வைணவதுக்கும் என்னமா
வெளக்கம் சொல்றாரு எங்க
கல்வியமைச்சரு
குடுங்கடா டாக்டர் பட்டத்தெ
அவருக்கு

மோகினிக்குட்டி ரொம்பவும் பிஸி
அதனலெனக்கு மன அழுத்தம்
அதைச் சொன்னால்
கெட்ட வார்த்தையில் திட்டுகிறாளென்று
கவிதையைப் பிடித்தேன்
கவிதையோ மரணக்குழி
காட்டுகிறது

ஆதலினால் காதல் செய்வீர்
இல்லடா
ஆதலினால் சாதல் செய்வீர்

கொக்கரக்கோ சொன்னான்
காதலும் வேண்டாம் சாதலும்
வேண்டாம்
நேரா தாய்லாந்து போ
இந்த ஒலகத்ல இருக்குற அத்தன
அழகையும் ஒன்னா சேத்தா
எப்டியிருக்குமோ அப்டியிருப்பாளுங்க
ஒன்றல்ல ரெண்டல்ல ஓராயிரம்
வேசிங்க
பேர்தான் வேசி
உண்மைல தெய்வம்

தெய்வமே பொண்ணாப் பொறந்து
தொடய விரிச்சா எப்டியிருக்குமோ
அப்டியிருக்கும்
அதுதான் நெஜம்

அப்டீன்னா வெறும் ஒரு
ஓட்டைக்காகவா இத்தனையும்?

போடா ஃபூல்
அற்றது பற்றெனில் உற்றது வூடு
அந்த வூடு எங்கெருக்கு?
அங்கேருக்கு