Anecdote

கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்ஜுனின் குறிப்பில் anecdote என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியது.  இதை என் தோழி எக்ஸிடம் (எக்ஸ் தோழி அல்ல; தோழி எக்ஸ்.  பெயர் சொல்லக் கூடாது அல்லவா, அதனால் இந்த ஏற்பாடு!) கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அர்ஜுனின் குறிப்பு வந்த ஃபேஸ்புக் பக்கத்தின் இணைப்பை அனுப்பினேன்.  ஏற்கனவே என் வீட்டுக்கு எதிரே இருக்கும் காந்தி நகர் க்ளப்புக்கு அருகில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்திருக்கிறேன், இனிமேல் … Read more

தியாகராஜா

பெரும் சங்கீத ரசிகனான என் இளம் நண்பன் அவனுடைய வழக்கமான ‘சினிக்கல்’ தன்மையுடன் என்னிடம் இன்று மாலை சொன்னான்: “நீங்கள் தியாகராஜா நாவலை இத்தனைக் காலம் இழுத்துக்கொண்டிருப்பதன் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.” ”என்ன காரணம்?” ”ஔரங்ஸேப் பற்றி எக்கச்சக்கமான நூல்கள் உள்ளன.  ஆனால் தியாகராஜாவின் வாழ்க்கை பற்றி ஒரு குறிப்பும் இல்லை.  அதனால்தான் உங்களால் எழுத முடியவில்லை.” ”எழுத்தில் என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மட்டுமல்லாமல் தியாகராஜாவும் என்னைப் போல் ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளர்தான்.  … Read more

இன்று மாலை சந்திக்கலாமா? – சிறுகதை

கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டு நிலைமை வெகுவாக மாறி விட்டது.  தலைகீழாய் மாறி விட்டது என்று சொன்னால்தான் கச்சிதமாக இருக்கும்.   பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் இரண்டு முறை மதியம் பன்னிரண்டு மணி அளவில் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் நண்பர் மணியை சந்திப்பேன்.  கூட நண்பர்களும் இருப்பார்கள்.  பிறகு அந்த இடத்தை டென். டௌனிங் என மாற்றினோம். ஒரு காலத்தில் என் வீட்டைப் போல் இருந்த வெஸ்ட்மின்ஸ்டர் பார் என்ற புனித ஸ்தலத்தைக் கொண்டிருந்த … Read more

புத்தகத் திருவிழா – 1

இன்று மாலை (28 டிசம்பர்) நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் 540 – 541. என்னுடைய எழுபது நூல்கள் ஸீரோ டிகிரி அரங்கிலும் ஒரு நூல் ஆட்டோ நேரட்டிவ் அரங்கிலும் கிடைக்கும். ஒரு நூல் 300 பிரதி விற்றால் 71 x 300 = 21300 ஆகிறது. ஒரு நூலுக்கு இருபது ரூபாய் ராயல்டி என்றாலும் சில லட்சங்கள் கைக்கு வரும். அப்படி விற்காமல் பத்து இருபது … Read more

2024இல் மனதைக் கவர்ந்த புத்தகங்கள்

அர்ஜுன் ராஜேந்திரன் ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆங்கில இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  இப்போது சில பத்திரிகைகளின் ஆலோசகராக இருக்கிறார்.  2024-இல் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.  அதில் Conversations with Aurangzeb நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு பத்தி உள்ளது.  மற்ற புத்தகங்களில் ஹங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai எழுதிய Satantango நாவலும் இடம் பெறுகிறது.  இந்த நாவல் … Read more

புத்தகத் திருவிழா

வரும் இருபத்தேழாம் தேதியிலிருந்து சென்னை புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை அரசியல்வாதிகளின் நாள் என்பதால் அன்று செல்வதில் அர்த்தமில்லை. அரங்குகளிலும் கூட்டம் இருக்காது. எனவே இருபத்தெட்டாம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன். அரங்கு எண்: 540 & 541. சென்ற ஆண்டைப் போல கழிப்பறை அருகில் இருக்கிறதா அல்லது நல்ல இடமா என்று எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. நான்கு மணியிலிருந்து அரங்குகள் மூடும் வரை … Read more