மன்னிப்பு (8)

அராத்து எழுதியதைப் படித்து விட்டீர்களா?  இப்போது இது பற்றி நான் இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் ஒரு வருத்தமும் இருக்கிறது.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் தகுதியில்லாத ஒரு புத்தகத்துக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது.  பரவாயில்லை.  எனக்கு உற்றமும் சுற்றமும் இலக்கியம்தான்.  உடன்பிறந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இல்லை.  சண்டையும் சரி, சமாதானமும் சரி, இலக்கியவாதிகளோடுதான்.  ஷோபா சக்தியின் பதிவில் நீங்கள் அதை ஓரளவு யூகித்திருக்கலாம்.  என் வீட்டில் … Read more

நடந்தது என்ன? : அராத்து (7)

பின்வருவது அராத்து அவரது முகநூலில் எழுதியது: சுற்றம் – நடந்தது என்ன ? சாரு – மனுஷ் – வி.மு மற்றும் கடைசியாக அராத்து. விநாயக முருகன் நாவலைப்பற்றி பேச விநாயக முருகனும் மனுஷ்யபுத்திரனும் சாருவை அழைக்கிறார்கள். கொடைக்கானலில் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு இடையில் சாரு நாவலைப் படிக்கிறார்.கொடைக்கானலில் இருந்து சென்னை வருகையில் காரில் அமர்ந்து நாவலைப் படித்துக் கொண்டே வருகிறார். இடையில் ஒரு கடையில் டீ குடிக்க நிறுத்திவிட்டு நாங்கள் எல்லாம் அரட்டை அடித்துக் கொண்டு … Read more

அடியேனைப் பற்றி ஷோபா சக்தி (6)

நான் முகநூல் பக்கங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை.  ஐந்து பத்து நிமிடங்களோடு சரி.  sting operation எல்லாம் நடப்பதால் வந்த அலர்ஜியும் ஒரு காரணம்.  பெண் பெயரில் வரும் யாரோடாவது எப்போதாவது உரையாடல் செய்தாலும் தத்துவம், இசை, இலக்கியம், குறிப்பாக தேவ தச்சன், தேவ தேவன் என்றுதான் உரையாடுகிறேன்.  assholes, இதை வெளியிடுங்கடா என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு.  கொஞ்ச நேரத்துக்கு முன்பு சவூதியில் வசிக்கும் என் நண்பர் கார்ல் மார்க்ஸ் ஷோபா சக்தி எழுதிய இந்தப் … Read more

இன்னும் கொஞ்சம்… (5)

ஒற்றுப் பிழைக்கும் இலக்கணக் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏன் எழுத வருகிறீர்கள்?  நாவலில் 200 பக்கம் வரை ஒரு வாக்கியம் கூட இலக்கணத்தோடு எழுதப்படவில்லை.  ”நான் நேற்று அவனைப் பார்ப்பேன்” என்று எழுதுவது ஒற்றுப் பிழையா?  ஒற்றுப் பிழைக்காக ஒருவரை தமிழை ரேப் செய்து விட்டார் என்று எழுதுவேனா?  வயது கம்மி என்றால் மூளையுமா வேலை செய்யாது?  ஒற்றுப் பிழையைக் குறிப்பிடும் ப்ரூஃப் ரீடர் அல்ல நான்…    ஒரே இலக்கணக் கொலை.  இங்க்லீஷ் மீடியத்தில் படிக்கும் அஞ்சாம் … Read more

மீண்டும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (4)

சாரு: நூற்றுக்குநூறுஅந்தநாவலைஉத்தமத்தமிழ் எழுத்தாளர்தாக்கிஎழுதுவார். அதில்எனக்குச்சந்தேகமேஇல்லை. உத்தமத்தமிழ்எழுத்தாளரும்நானும்எப்போதாவதுசந்தித்துக்கொள்வோம்… புலிகள்விஷயத்தில்அப்படிநடந்தது. இப்போதுஇந்தநாவல்விஷயத்திலும்அப்படியேநடக்கும். …’’ மனுஷ்ய புத்திரன்: இதற்குஎன்னஅர்த்தம்என்றுதெரியவில்லை. ஜெயமோகனுக்குஇந்தநாவல்பிடிக்காதுஎன்றுஎந்தஅடிப்படையில்அவர்முடிவுக்குவருகிறார்? அல்லதுபிடித்துவிடக்கூடாதுஎன்றுநினைக்கிறாரா? இப்படிதமிழ்இலக்கியத்தின்சக்திவாய்ந்தஇரண்டுஆளுமைகள்சேர்ந்துகூட்டாகஎதிர்க்கப்படவேண்டியஅளவுஅதுசமூகவிரோதநாவலா? சாரு: ஒரு நண்பரின் வீட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே உங்களை காஃபி குடிக்கச் சொல்கிறார்கள்.  நீங்கள் மறுக்கிறீர்கள்.  அவர்களோ மறுபடியும் அன்புத் தொல்லையைத் தொடர்கிறார்கள்.  குடிங்களேன்.  கொஞ்சமா குடிங்களேன்.  என்னதான் அன்புத் தொல்லை கொடுத்தாலும் விடாப்பிடியாக தங்கள் கொள்கையில் உறுதியோடு நிற்கும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.  மனுஷ்ய புத்திரன் அப்படிப்பட்டவர்தான்.  எத்தனையோ முறை இன்னொரு பெக் சாப்பிடுங்கள் என்று … Read more

மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (3)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இருவரை நான் நீண்ட காலமாக முகநூலில் block செய்து வைத்திருக்கிறேன்.  காரணம், அவர்கள் முகநூலில் எழுதுவதைப் படித்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  மேலும், இந்த முகநூலால் நட்பு கெட்டு விடக் கூடாது என்ற முக்கியமான காரணமும் உண்டு.  அந்த இருவரில் ஒருவர் மனுஷ்ய புத்திரன்.  இதை ஹமீதிடமே போனிலும் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறேன். ஆனால் முகநூலில் ஒருவரை ப்ளாக் செய்தாலும் நம் நண்பர்கள் அவர்கள் எழுதுவதை மெயிலில் அனுப்பி மன … Read more