மார்த்தினி

(ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில் T என்ற எழுத்தை த என்றுதான் உச்சரிக்கிறார்கள்.  எனவே மார்த்தினி என்றே குறிப்பிடவும்.  அங்கே போய் மார்ட்டினி என்றால் ஏற இறங்கப் பார்க்கிறார்கள்.  அந்தப் பார்வைக்கு நீ என்ன ஆங்கில அடிமையா என்று பொருள் என்று நண்பன் சொன்னான். ) டியர் சாரு, உங்கள் எழுத்தைப் படித்து ரசிப்பதோடு சரி.  உங்கள் கற்றலின் பன்முகத் தன்மையை வியக்கத்தான் முடிகிறது,  நந்தனார் போல.  விஷயம் இது தான்…  உங்களைப் படித்து … Read more

ஆயுர்வேதம் (2)

சென்ற குறிப்பில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன்.  நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் போல் என்னென்ன செய்யக் கூடாது என்பதும் முக்கியம்.  தெருமுக்குகளில் உள்ள டீக்கடையில் நின்று டீ குடிப்பதை உடனே நிறுத்துங்கள்.  அங்கே உபயோகப்படுத்துவது தேயிலையே அல்ல.  தேநீர் அருந்தத் தோன்றினால் ஒரு கோப்பை வெந்நீர் போதும்.  அதில் Cranberry டீ பாக்கெட்டைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து பாக்கெட்டை எடுத்துப் போட்டு விட்டு, … Read more

எப்படிப் பாடினரோ…

ஒருவகையில் நான் லிங்குசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவருடைய படத்தில் கர்னாடக சங்கீதத்தை அவமானம் செய்திருந்ததால் எனக்குள் ஏற்பட்ட ஆவேசமும் கோபமும் மும்மூர்த்திகளைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற அளவுக்கு என்னைக் கொண்டு வந்து விட்டது.  அதனால் என்ன படித்துக் கொண்டிருந்தாலும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் கர்னாடக சங்கீதம் மெலிதாக ஒலித்துக் கொண்டே இருப்பது போல் வைத்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்குப் பிடித்தவர்கள் என்று இதில் ஒரு பட்டியலும் உண்டு. சில பேரைக் கேட்பது … Read more

ஒரு மாதிரிக்கு…

தினமும் குறைந்தது பத்து ஆபாசக் கடிதங்கள் வருகின்றன.  பேசாமல் மெயில் ஐடியையே ரத்து செய்து விட்டு ரஜினி, கமல் மாதிரி தொடர்பு எல்லைக்கு வெளியே போய்  விடலாமா என்று தோன்றுகிறது.  ஆனால் ஒரு விஷயம் ஆச்சரியப்படுத்துகிறது.  ஜாலியாகவும் இருக்கிறது.  என் எழுத்து எத்தனை பேருக்கு மன உளைச்சலைத் தருகிறது, தேள் கொட்டுவது போல் இருக்கிறது, உடம்பில் பூரான் நெளிவது போல் இருக்கிறது, தோல் வியாதி வந்தது போல் இருக்கிறது!!!   நம்முடைய எழுத்து இத்தனை பேரையா துன்பப்படுத்துகிறது … Read more