ஜனவரி 5 : காமராஜர் அரங்கம் : உங்கள் விழா

முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  ஜனவரி 5 திங்கள் கிழமை.  அதிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து அலுவலகம் தொடங்கும் முதல் நாள்.  ஆனால் எனக்கு வேறு வழியே இல்லை.  ம்யூஸியம் தியேட்டரில் வைத்தால் நூறு பேர் நிற்க வேண்டியிருக்கும். அதை நான் விரும்ப மாட்டேன்.  ஆயிரம் பேர் திரும்பி்ப் போக வேண்டியிருக்கும்.  அதுவும் சரியில்லை.  ஒரு 2000 பேராவது வந்து அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள அரங்கம் தான் தேவை.  அப்படிப்பட்ட அரங்கம் காமராஜர் அரங்கம்தான்.  டிசம்பர், … Read more

புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக : அராத்து

பின் வருவது அராத்து  தன் முகநூலில் எழுதியது: வெண்முரசு விழாவைப்பற்றி ஏதும் எழுதவில்லையே நீங்கள் என ஜெயமோகன் போனில் கேட்டுவிட்டதால் இந்த பதிவு. புத்தகத்துக்கு ஏன் மார்கெட்டிங்க் என இன்னமும் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் ஒன்றரை லூஸுக்களுக்கு இதற்கு மேலும் பதில் சொல்லாமல், மார்கெட்டிங்கை இதை விட நூறு மடங்கு முன்னணி எழுத்தாளர்கள் செய்தாக வேண்டும். பதிப்பகமும் விளம்பரங்கள் செய்ய வேண்டும் , விழாக்கள் எடுக்க வேண்டும் எனினும் , செலவு என வந்து விட்டால் பதிப்பகங்கள் இன்னமும் … Read more

புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா தொடர்பாக…

இரண்டு விஷயங்கள்.  புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா தொடர்பாக செல்வகுமார் கடும் மழையிலும் அலைந்து திரிந்து விசாரித்ததில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் ஒரு மாலைப் பொழுதுக்குக் கட்டணம் ஐந்து லட்சம்ரூபாய் (ஒரு மணி நேரத்துக்கு என்று சொன்னதாக ஞாபகம்) என்று தெரிந்ததால் அந்தத் திட்டம் கைவிடப் படுகிறது.   ஜனவரி முதல் வாரத்தில் வெளியீட்டு விழா இருக்கும்.  வேறொரு அரங்கத்தில் பேசி இருக்கிறோம்.  72000 ரூ. கட்டினால் அரங்கம் கிடைக்கும்.  டிசம்பர், ஜனவரி இசைக் காலம் … Read more

Interstellar

க்றிஸ்டோஃபர் நோலனின் கற்பனையும் சிருஷ்டித்தன்மையும் வறண்டு விட்டது, அவர் இப்போது ஒரு ‘ஹாலிவுட்’ இயக்குனர் ஆகி விட்டார், பழைய நோலன் இப்போது இல்லை  என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு.   அந்த மாதிரி நினைத்துத்தான் இண்டர்ஸ்டெல்லாரைப் பார்த்தேன். பார்த்த பிறகு நோலனின் படங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.  அது மட்டும் அல்லாமல், உலகின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.  விரிவாக இது பற்றி எழுத எனக்கு நேரம் இல்லை. … Read more