(2) புதிய எக்ஸைல் : கவிஞர் குமரகுருபரன் வாழ்த்து

புதிய எக்ஸைலின் சில பகுதிகளை இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் படித்தேன்.அப்படி ஒரு ரம்யமான மொழி சாரு.அட்டகாசம் 🙂 குமரகுருபரன். இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் புதிய எக்ஸைலின் ஒரு பகுதி வெளிவந்துள்ளது.  புதிய எக்ஸைல் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரியாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  தமிழ் இந்து நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றி.

புதிய எக்ஸைல் பற்றிய செய்தி

  புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் பற்றியும், புதிய எக்ஸைல் பற்றியும் என்னுடைய செய்தி ஒன்று இன்றைய சத்யம் தொலைக்காட்சியின் காலை ஏழரை மணி செய்தியிலும் பிறகு இன்று முழுவதும் இடம் பெறும் செய்திகளிலும் வெளிவர இருக்கிறது.  

சிலுவையின் ஏழு வார்த்தைகள் : கார்த்திகைப் பாண்டியன்

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதிய சிலுவையின் ஏழு வார்த்தைகள் என்ற இந்தச் சிறுகதை இதுவரை வேறு எந்த இதழிலும் வெளியானதில்லை.  சமீப ஆண்டுகளில் நான் படித்த் மிகச் சிறந்த கதைகளில் இது ஒன்று. சாரு சாக்ரடீஸ் – அறிந்து கொள்! மனிதர்கள் ஒரு பாதாள குகையினுள் வசிக்கிறார்கள். அதன் நாவு வெளிச்சத்தை நோக்கி நீள்கிறது. தங்கள் குழந்தைப்பருவம் தொடங்கி அவர்கள் அதனுள்ளேதான் வாழ்கிறார்கள். அவர்களுடைய கழுத்துகளும் கால்களும் எங்கும் நகர்ந்து போக முடியாதபடி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களால் நேராகத்தான் … Read more

அடியேனைப் பற்றி : நாகூர் அப்துல் கையூம்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையில் என்னைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை இல்லை.  விமர்சனம், திட்டு, ஆதங்கம் போன்றவைகளே காணப்படுகின்றன.  ஆனால் நாகூர் பற்றி நான் எழுதியதை இவ்வளவு பிரமாதமாக யாருமே தொகுத்ததில்லை.  எனக்கே நான் நாகூர் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருந்தது.  இந்தக் கட்டுரையை நீங்கள் பொறுமையாகப் படித்தால் அது புதிய எக்ஸைலுக்குள் நுழைவதற்கான ஒரு தயாரிப்பைத் தரும்.  அபாரமான கட்டுரை.  திட்டுவது பற்றிக் கவலைப்படவில்லை.  அது கையூமின் உரிமை.  என்னிடமே இல்லாத … Read more

ஊர் கூடித் தேர் இழுப்போம்!

  சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்திடுவார்கள்.  ஆனால் நான் அப்படி எந்த நிபந்தனையும் வைத்துக் கொண்டதில்லை.  பலருக்கும் டயரி, நோட்டுப் புத்தகம், துண்டுச் சீட்டு என்று எதையும் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.   இனிமேல் அப்படிச் செய்வதாக இல்லை.  ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ.  கொடுத்தால் மட்டுமே கையெழுத்து.  இதை நான் சேத்தன் பகத்திடமிருந்தே தெரிந்து கொண்டேன்.  அவருடைய புத்தகம் இரண்டே வாரத்தில் 20 லட்சம் விற்றிருக்கிறது.  ராயல்டி நாலு கோடி கிடைக்கும்.  … Read more