விவாதம்

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை.  இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை.  முடித்ததும் எழுதுவேன். Manushya Puthiran: பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே … Read more

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எனக்குச் சொன்ன அறிவுரை…

மனுஷ்ய புத்திரன் நான் சொன்ன விஷயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் அல்லவா?  அது இதுதான். http://andhimazhai.com/news/view/charu18.html கேள்வி பதிலில் குறிப்பிடப்படும் பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை: http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/4540815#sthash.BdhnUhQQ.dpuf    

தமிழின் palimpsest வரலாறு

தமிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது.  சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.  ஒரு விஞ்ஞானி பேசினார்.  ”அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்.”  மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள்.  இப்படிப்பட்ட வெட்டிப் … Read more

சாகித்ய அகாதமி பரிசு யாருக்கு?

இரண்டொரு தினங்களுக்கு முன்பு பத்திரிகை நண்பரிடமிருந்து ஃபோன்.  சாகித்ய அகாதமி பரிசுக்காக யார் யாரைப் பரிந்துரை செய்வீர்கள்?  நான் கேட்டேன், அந்தப் பரிசு அகில இந்திய அளவில் கொடுக்கப்படுகிறதா, அல்லது, ஒவ்வொரு மொழிக்குமா? சத்தியமாக நம்புங்கள், எனக்கு அந்த விஷயம் தெரியாது.  அகிலனுக்கு ஒரு விருது  கொடுக்கப்பட்ட போது சுந்தர ராமசாமி கடுமையாகத் தாக்கி எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.  அது சாகித்ய அகாதமியா, பா. ஞானபீடமா என்று குழப்பம்.  பிறகு பத்திரிகை நண்பரே எனக்கு எல்லாவற்றையும் விளக்கிய பிறகு … Read more

பித்தநிலையின் உச்சம்

பலமுறை சொல்லியிருக்கிறேன், என்னுடைய பித்தநிலையையே எழுத்தாக மாற்றுகிறேன் என்று.  சிலருக்கு அது அரைவேக்காடாகவும் சிலருக்கு அதை நான் வெற்றிகரமாகக் கொடுத்து விட்டதாகவும் தோன்றுகிறது.  சற்று நேரத்துக்கு முன்பு மதன் முத்து என்ற நண்பர் பின்வரும் சூஃபி பாடல் இணைப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.   பித்தநிலையின் உச்சம் இந்தப் பாடல்.  இதே போன்ற பாடல்களை நாகூரில் கேட்டு வளர்ந்தவன் நான்.  என் ரத்தத்தில் ஓடுவது இந்த இசைதான்.  இந்தப் பித்தநிலைதான்.  இதைத்தான் புதிய எக்ஸைலில் கொண்டு வர முயற்சி … Read more

ஒரு பிழையும் விளக்கமும்

ஐயா, இன்று தாங்கள் எழுதியுள்ள தினமலர் பகுதியில் இசை நுணுக்க விளக்கம்- M D ராமநாதன் என்று எழுதியுள்ளீர். அப்புததகத்தை எழுதியது இசை மேதை சங்கீத கலாநிதி Dr S ராமநாதன் ஆவார் என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். His disciple and grand daughter Sucharithra Raghunathan sorry madam.Dr. எஸ்.  ராமநாதன் அவர்களைத்தான் எம்.டி. ராமநாதன் என்று  சொல்லி விட்டேன். தொலைபேசி நேர்காணல்களில் இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.  வாஸ்தவத்தில் சிலப்பதிகாரத்து இசை … Read more