புதிய எக்ஸைல் : முதல் பிரதி

1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது பாரதி மணியோடு அவ்வளவு பழக்கம் இல்லை.  அங்கே வெங்கட் சாமிநாதனோடு சேர்ந்து விட்டால் மற்றவர்களோடு நட்பு கொள்வது சாத்தியம் இல்லை.  சாம் ஒன்றும் சொல்ல மாட்டார்.  ஆனால் நமக்கே அப்படித் தோன்றி விடும்.  அது மாதிரி ஒரு ‘பயங்கரவாத’ குழு அது.  டாக்டர் ரவீந்திரன் மட்டும் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்.  இந்தப் பிரச்சினையினாலேயே க.நா.சு., ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களோடு அங்கே பழக முடியாமல் போய் விட்டது.  இலக்கியச் … Read more

கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ்…

அன்பிற்குரிய சாரு,  ஊரின் மிக அழகான பெண் படித்துக் கொண்டிருக்கிறேன். சு. கிருஷ்ணசாமி, ஜி. குப்புசாமி வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள். மிக நேர்த்தியாக, கதைகளின் மோனத்தை, தனிமையை கலைக்காமல் அப்படியே கடத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாரு. Thanks & Regards, Bala K அன்புக்குரிய பாலா, 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைக்கிறேன்; ஓரிரு ஆண்டுகள் பிந்தியோ முந்தியோ இருக்கலாம்.  அப்போது நான் தில்லியில் இருந்தேன்.  அப்போது பிரம்மராஜன் என்ற கவிஞர் ஊட்டியிலிருந்து மீட்சி என்ற பத்திரிகையை … Read more

ஷாஹுல் ஹமீது அரசரே…

எத்தனையோ இசைக் கலைஞர்கள், இசை மேதைகள், இசை ஞானிகள் உண்டு.  ஆனால் எனக்கு இந்தப் பாடகரைக் கேட்பது போல் உன்னதத் தருணம் வேறேதும் இல்லை.  பல்லவியே ஆறு நிமிடம்.  அதற்குப் பிறகு பாடல் மூன்று நிமிடம் தான்.  இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எங்கே கேட்டாலும் என் கண்கள் குளமாகி விடும்.  வெறும் ஹார்மோனியம், ஷெனாய், ரெண்டு டேப் இதை வைத்துக் கொண்டு இசை வானின் உச்சத்தில் சஞ்சரிக்கும் இந்த இசை ஞானிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருந்தும் … Read more

வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள்

வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற பத்தி இன்றிலிருந்து புதிய தலைமுறை இதழில் துவங்கியுள்ளது.  நண்பர்கள் வாங்கிப் படியுங்கள்.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய தலைமுறை இதழில் பத்தி வெளிவரும். tamilkushi.com என்ற ஃபேஸ்புக் தளத்தில் என்னுடைய நேர்காணல் ஒன்று இன்று மதியம் இரண்டு மணிக்கும் பிறகு இரவு பத்து மணிக்கும் வெளியாகிறது.  கேளுங்கள். இதுவரை நான் பேசிய மேடைப் பேச்சுக்களிலேயே நேற்று பேசியதுதான் ஆகச் சிறந்தது என்பது என் கருத்து.  வாசகர் வட்டத்திலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்களுக்கும் நன்றி. … Read more