புதிய எக்ஸைல் எப்படி உருவானது? (2)
சஜ்ஜத் அலிகான் & ஃபரீஹா பர்வேஸ் https://www.youtube.com/watch?v=KaT9lEyqzU0
சஜ்ஜத் அலிகான் & ஃபரீஹா பர்வேஸ் https://www.youtube.com/watch?v=KaT9lEyqzU0
அப்பாஸ் அலி கான் https://www.youtube.com/watch?v=KaT9lEyqzU0
அன்புள்ள வாசகர்களுக்கு, பின்வரும் கடிதத்தை சென்ற மாதம் என் நெருக்கமான நண்பர்கள் மூன்று பேருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. கடிதம்: புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 5-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் முடிந்து அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் திறக்கும் தேதி ஜனவரி 5. திங்கள் கிழமை. சிரமத்துக்கு என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால், … Read more
1.திங்கள் கிழமை அன்று மாலை சரியாக ஆறரை மணிக்குக் கூட்டம் ஆரம்பித்து விடும். இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை. முடியும் நேரம் எட்டரை என்று வைத்திருக்கிறோம். ஒருவேளை ஒன்பது ஆகலாம். ஒன்பதுக்கு மேல் ஒரு நிமிடம் கூட அதிகம் ஆகாது. பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று நான் படாத அவஸ்தை பட்டிருக்கிறேன் என்பதால்தான் இந்தத் தீவிரமான முடிவு. அது மட்டும் அல்லாமல் நேரம் தவறாமையை நான் ஒரு தீவிரவாதியைப் போல் என் வாழ்வில் கடைப்பிடித்து … Read more
ஜனவரி 5 மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக சென்னை நகர் எங்கும் ஐநூறு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அபாரமான பணியை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. படங்கள்:
ஜனவரி 5-ஆம் தேதி நடக்க இருக்கும் புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவை பொதுமக்களுக்கு அறிவிக்கும் நிமித்தமாக காமராஜ் அரங்கில் நேற்று மிகப் பெரிய ஃப்லெக்ஸ் போர்ட் நிறுவப்பட்டுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக, சுப்ரமணியன், நந்தா ப்ரதீப், பெரியார் சம்பந்தர், தர்ம சேனன்.