Tintin-இன் சாகசங்கள்

The adventures of Tintin என்பது முதலில் ஃப்ரெஞ்சில் எழுதப்பட்டு பின்னர் பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சாகசக் கதைகள்.  ஐரோப்பாவில் வெகு பிரசித்தம்.  புத்தக விழாவில் இதன் எட்டு தொகுதிகளும் உள்ளன.  ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் ரூபாய்.  நேற்று வாங்க நினைத்தேன்.  எட்டாயிரம் ரூபாய் என் கைக்கு எட்டாது.  இதை யாரேனும் எனக்கு வாங்கித் தர இயலுமா?  இன்னும் ஓரிரு நூல்கள் உலகத் தமிழாராய்ச்சி அரங்கில் வாங்க வேண்டும்.  முடிந்தவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். charu.nivedita.india@gmail.com

எனக்கு யானை வளர்க்க ஆசை!

புதிய தலைமுறை வார இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற தொடரின் மூன்றாவது அத்தியாயம் இது: ஒருநாள் காலை ஏழு மணி அளவில் அபிராமபுரம் வழியாக நாகேஸ்வர ராவ் பூங்காவை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு லாஸா ஆப்ஸோ நாய்க்கு ஒரு இளைஞன் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டேன்.  அந்த நாயின் முதுகில் தோல் வியாதி கண்டிருந்தது.  கழுத்தில் காயம் பட்டு ரத்தக் களறியாக இருந்தது. சாலையில் அனாதையாக அலைந்து … Read more

போர்ட்டர்கள் தேவை

நேற்று புத்தக விழா செல்ல கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கிழக்கு அரங்கில் மாலை ஏழரையிலிருந்து ஒன்பது வரை இருந்தேன். பலருக்கும் கையெழுத்திட்டேன்.  அதற்கு முன்பாக உலகத் தமிழாராய்ச்சி மைய அரங்கம் சென்றேன்.  மிக அருமையான புத்தகங்கள் உள்ள அரங்கம்.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமே பதிப்பித்த தமிழ் ஆங்கில அகராதி நான்கு தொகுதி வாங்க எண்ணி வங்கி அட்டையை நீட்டினேன்.  வங்கி அட்டை ஏற்கப்படாது என்றார்கள்.  உடனே பக்கத்திலிருந்த நண்பர் 600 ரூபாயைக் கொடுத்து வாங்கிக் கொடுத்தார். … Read more

புதிய எக்ஸைல் : ஒரு மதிப்பீடு

இந்த வார குங்குமம் இதழில் புதிய எக்ஸைல் பற்றிய ஒரு அருமையான மதிப்பீடு வந்துள்ளது.  பார்க்கவும். இன்று இரவு பதினோரு மணிக்கு சன் நியூஸில் என் வாசகர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு ஆகிறது.  இன்று மதியம் மூன்றரையிலிருந்து நான்கு வரை நேரடி ஒளிபரப்பில் கிடைத்தது.  வாசகர்கள் சுவாரசியமான கேள்விகளைக் கேட்டனர். இன்று மாலை ஆறரை அளவில் புத்தக விழாவில் கிழக்கு, உயிர்மை அரங்குகளில் இருப்பேன்.  கையெழுத்து வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அந்திமழை கேள்வி பதில்கள்

சரியாக 21 வாரமாக அந்திமழையில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு வாரமும் அதற்கான லிங்கையும் இங்கே சாருஆன்லைனில் கொடுத்து வருகிறேன்.  ஆனால் பல நண்பர்கள் இதைப் படிப்பதில்லை என்று அறிகிறேன்.  முகநூலில் தமிழில் வெளிவரும் மொக்கை படங்களுக்கு 20 வரி விமர்சனம் எழுதித் திட்டும் அவர்களுக்கு இங்கே கொடுக்கும் இணைப்பைத் தட்டி நான் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.  இதே கேள்வி பதில்களை இணைப்பு தராமல் அப்படியே வாசிக்கக் கொடுத்தால் படித்து … Read more

புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (8) : Fuck

வார்த்தைகளில் எனக்குக் கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை என்று எதுவும் கிடையாது.  என் 30-ஆவது வயதில் ஒரு கருத்தரங்கில் Germaine Greer நடத்திய CUNT என்ற பத்திரிகையிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன்.  பெண்கள் தமது யோனியைக் கொண்டாட வேண்டும் என்பது க்ரேரின் கோட்பாடு.  அவருடைய The Female Eunuch என்ற நூலை உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.  பின்னால் இருப்பது ஜெர்மெய்ன் க்ரேர் பெருமையாகக் கொடுத்த அவருடைய புகைப்படம்.  மேலும் அவரைப் பற்றிய, அவர் எழுதிய … Read more