பேசா மொழி

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமாவிற்கான இணைய மாத இதழான பேசாமொழியின் 33வது இதழ் 5ஆம் தேதி வெளிவந்துவிட்டது. இந்த இதழில் காமிக்ஸ் பற்றிய ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கட்டுரை மிக முக்கியமானது. பெண் இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் நேர்காணல், மொழியாக்க முயற்சியான ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகேந்தர்) தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது வழங்கிய நிகழ்வு பற்றிய பதிவு (தினேஷ்) ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் தொடர்ச்சி, பார்வையாளர்களின் … Read more

காக்கா முட்டை

காக்கா முட்டை இன்னும் பார்க்கவில்லை.  தலை போகும் அவசரத்தில் தலையணை தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இடையில் முகநூலை எட்டிப் பார்த்த போது காக்கா முட்டை என்று ஒரு படம் வந்திருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.  அதற்கு அராத்து ஒரு விமர்சனம் எழுதியுள்ளார்.  அதில் தலைமுறைகள் (பாலு மகேந்திரா) பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. என்னுடைய  சினிமா அறிவுக்கு எட்டியபடி அது சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படம்.  கடைசிக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழா என்ற … Read more

இலவசம், இலவசம், இலவசம்… (2)

இலவசம் என்ற கட்டுரையின் விஷயத்தை ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்து, திடீரென இன்று எழுதியதன் காரணம் ஒன்று உண்டு.  அதை எழுதத் தூண்டியதற்கு மே 29-ஆம் தேதி முத்துக்குமார் என்ற எனது நண்பரிடமிருந்து என் அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியே காரணம்.   முத்துக்குமார் மாணவராக இருந்த போதிலும் அவரை நான் நண்பராகவே கருதுகிறேன்.  அந்தக் குறுஞ்செய்தி: வணக்கம் சாரு.   உங்களது “பலஹீன இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்…” என்ற பதிவைப் படித்ததில் இருந்து … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – அரு. ராமநாதன்

வழக்கம் போல் கட்டுரையை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாக உள்ளன.  பின்னூட்டங்கள் எப்படி வரும் என்று அந்த வார்த்தைகளைக் கூட முன்கூட்டியே யூகித்து விட்டேன். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1924-%E2%80%93-1974/article2852623.ece

இலவசம், இலவசம், இலவசம்!!!

இந்த விஷயத்தை நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.  எழுத சந்தர்ப்பமும் நேரமும் வாய்க்கவில்லை.  என்னிடம் இல்லாத இரண்டு விஷயங்கள் பணமும் நேரமும்.  என்னிடம் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் இதுவரை பணம் கேட்டதில்லை.  ஒருமுறை ஒரு பிரபலமான ஓவியர் தன் மகனை அமெரிக்காவில் படிக்க வைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  நான்கு ஆண்டுகள் இருக்கும்.  என் வாழ்வில் நடக்கும் அபத்தங்களில் ஒன்றென நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.  திடீரென்று … Read more

இதயம் பலஹீனமானவர்கள் படிக்க வேண்டாம்… (மீண்டும்)

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட இந்தக் குறிப்பிட்ட  கட்டுரை காணாமல் போய் விட்டதால் மீண்டும் பதிவிடுகிறேன். பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அவந்திகாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆயுள் காப்பீடு செய்து கொள்ள முயன்றேன்.  அதற்கான உடல் தகுதியைப் பரிசோதிக்க ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டேன்.  மருத்துவர் மிக மிக செக்ஸியான ஒரு இளம் பெண்.  அப்படிப்பட்ட பெண் மருத்துவர்கள் கடுகடு என்று இருப்பர்.  அதற்கு மாறாக, இந்தப் பெண் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு சோதனைகள் செய்தார்.  … Read more